சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர், வரும் நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 15-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இதில், நடப்பு உலக சாம்பியனும், சீன வீரருமான டிங் லிரனும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷும் மோத உள்ளனர்.
இந்தப் போட்டியை சென்னை, டெல்லி, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் நடத்த விருப்பம் தெரிவிக்கப்பட்டு இருந்தநிலையில், சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முன்னதாக கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தனர்.
இந்தநிலையில் உலகின் நம்பர் ஒன் ஜூனியர் செஸ் வீரராக அண்மையில் அறிவிக்கப்பட்டார் குகேஷ். இதனை கவுரவிக்கும் விதமாக முகேஷ் படிக்கும் தனியார் பள்ளி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் செஸ் பேஸ் இந்தியாவின் சிஇஓ சாகர் ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விழாவின்போது 220 ட்ரோன் கோமராக்காள மூலம் குகேஷ்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வான் கண்காட்சி நடைபெற்றது. அத்துடன் பள்ளிக் குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் குகேஷை கவுரவிக்கும் வகையில் பென்ஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கேரளாவின் வயநாடு நிலச்சரிவுக்கு தனது பங்காக ரூபாய் பத்து லட்சத்தை நிவாரண நிதியாக குகேஷ் அளித்தார். இது அனைவரையும் நிகழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனைதொடர்து செய்தியாளர்களிடம் பேசிய குகேஷ், " உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை சிங்கப்பூரில் விளையாடினாலும் எனது கவனம் முழுவதும் ஆட்டத்தில் மட்டும்தான் இருக்கும்.
அத்துடன், "சொந்த ஊரில் நம் மக்கள் முன்பு தான் விளையாட வேண்டும் என்று இல்லை எங்கு விளையாடினாலும் சிறப்பான ஆட்டத்தை விளையாடவே, நான் நினைப்பேன். குறிப்பாக அடுத்ததாக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் பல பேர் பங்கேற்க உள்ளனர். அது கண்டிப்பாக பெரிய அளவில் பேசப்படும். எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் செஸ் போட்டியை கொண்டு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம்? இன்று தீர்ப்பு வெளியாகிறது!