மும்பை: கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் பெயரை தவிர்க்க முடியாது. ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம், 100 சதங்கள் என சச்சின் தெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை அடுக்கிக் கொண்டே சென்றாலும், அதற்கு அடித்தளம் அமைத்த தினம் இன்று தான்.
சச்சின் தெண்டுல்கர் தனது 17 வயதில் இன்று தான் தனது முதல் சர்வதேச சதத்தை விளாசினார். மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராப்போர்ட் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தனது முதல் சதத்தை சச்சின் தெண்டுல்கர் விளாசினார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து இருந்தாலும் அது அனைத்திற்கும் இன்றைய நாள் தான் தொடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
A SACHIN TENDULKAR MASTERCLASS!
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 14, 2024
- On this day 34 years ago, teenager Sachin scored 68 & 119 in a Test match in England. He was just 17 years old, the GOAT stepped up for India. pic.twitter.com/UjCMPyFuPx
ஏறத்தாழ 34 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 1990ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய சச்சின் தெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசினார். அப்போது அவருக்கு வயது 17 ஆண்டுகள் 112 நாட்கள் மட்டுமே. மேலும் சாதனையின் மூலமே தனது முதல் சர்வதேச சதத்தை சச்சின் பூர்த்தி செய்தது கூடுதல் சுவாரஸ்யத்தக்க தகவலாகும்.
அந்த சதத்தை அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் மிகக் குறைந்த வயதில் சதம் விளாசிய மூன்றாவது வீரர் என்ற சிறப்பையும் சச்சின் தெண்டுல்கர் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்டத்தில் சச்சினின் அடித்த சதம் இந்திய அணியையே காப்பாற்றக் கூடியதாக அமைந்து என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டத்தின் நான்காவது நாளில் தொடர் விக்கெட் வீழ்ச்சியால் திணறிய இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர் நிலைத்து நின்று விளையாடி 189 பந்துகளில் 119 ரன்கள் விளாசி அணிக்கு பலம் சேர்த்தார். சச்சினின் சதத்தின் உதவியுடன் இங்கிலாந்துக்கு எதிரான அந்த ஆட்டத்தை இந்திய அணி டிரா செய்தது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் விளையாடி உள்ள சச்சின் தெண்டுல்கர் அதில் 329 இன்னிங்ஸ்களில் 15 ஆயிரத்து 921 ரன்கள் குவித்துள்ளார். இதில் 51 சதங்கள், 6 இரட்டை சதங்கள், 68 அரை சதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
#OnThisDay in 1990, the legendary Sachin Tendulkar scored his maiden international 💯 against England at Old Trafford 🙌
— BCCI (@BCCI) August 14, 2024
He hit that magnificent knock at the age of 17 👏👏@sachin_rt | #TeamIndia pic.twitter.com/hzEY4Ed92B
சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அதிக ரன்கள் எடுத்தவர்களில் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 463 போட்டிகளில் 452 இன்னிங்ஸ்களில் விளையாடி 49 சதங்களுடன் 18 ஆயிரத்து 426 ரன்கள் சச்சின் தெண்டுல்கர் எடுத்துள்ளார். இதில் 49 சதங்கள், ஒரு இரட்டை சதம் மற்றும் 96 அரைசதங்கள் அடங்கும்.
சச்சின் தெண்டுல்கர் ஆறு உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளார். மேலும், கடந்த 2011 உலக கோப்பை வென்ற அணியில் சச்சின் தெண்டுல்கர் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிரிட்டீஷ் பாடகியுடன் ஹர்திக் பாண்டியா காதலா? யார் அந்த ஜாஸ்மின் வலியா? ரகசியம் உடைந்தது எப்படி? - Hardik Pandya Dating jasmine walia