ETV Bharat / sports

ஆர்சிபி மீது வன்மத்தைக் கக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்.. மீம்ஸ் மழையால் நனைந்த சோஷியல் மீடியா! - CSK Fans Troll RCB - CSK FANS TROLL RCB

CSK Fans Troll RCB: ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் பெங்களூரு அணி தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், சிஎஸ்கே ரசிகர்கள் அதனைக் கொண்டாடும் வகையில் மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஆர்சிபி அணியின் புகைப்படம்
ஆர்சிபி அணியின் புகைப்படம் (Credits: ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 9:20 PM IST

சென்னை: ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் (IPL Playoffs) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் (RCB VS RR) மோதிய நிலையில், அதில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிபையர் 2க்கு முன்னேறி உள்ளது.

இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்து பெங்களூரு அணியை முதலில் பேட்டிங் செய்ய வைத்தது. பவர்பிளேவில் இருந்து டெத் ஓவர்கள் வரை பெங்களூரு அணியை எங்கேயுமே தலைதூக்க விடவில்லை ராஜஸ்தான் பந்து வீச்சாளர்கள். இதன் காரணமாக, 20 ஓவர்களில் வெறும் 172 ரன்களை மட்டுமே பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது.

அதிகபட்சமாக ராஜத் பட்டிதார் 34, கோலி 33, மஹிபால் லோமரோர் 32 ரன்களும் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 174 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 42, ரியான் பராக் 36 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் பெங்களூரு அணி தொடரை விட்டு வெளியேற, ராஜஸ்தான் அணி குவாலிபையர் 2க்கு முன்னேறியது.

இந்த நிலையில், பெங்களூரு அணி தோல்வி அடைந்ததை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் (Instagram), எக்ஸ் (Twitter), பேஸ்புக் (Facebook) என எங்கு சென்றாலும், சென்னை ரசிகர்களின் மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் தான் அதிகம் இடம் பிடித்திருக்கின்றன.

முன்னதாக, பிளே ஆஃப் சுற்றை தீர்மானிக்கும் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் (CSK VS RCB) மோதின. அதில் பெங்களூரு அணி வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அப்போது பெங்களூரு அணி ரசிகர்கள், சென்னை அணியின் ரசிகர்களை கிண்டல் அடித்தனர்.

அதற்கு பழி தீர்க்கும் வகையில், பெங்களூரு அணியின் தோல்விக்காக காத்திருந்த சென்னை ரசிகர்கள் தற்போது படையெடுத்துள்ளனர். ராஜஸ்தான் - பெங்களூரு போட்டியின் போது கூட அகமதாபாத் மைதானத்தில் சில சென்னை ரசிகர்களை பார்க்க முடிந்தது. இந்நிலையில், சென்னை ரசிகர்கள் பெங்களூரு அணியை கலாய்த்து பதிவிட்ட மீம்ஸ்களை தற்போது பார்க்கலாம்.

பெங்களூரு அணியை கிண்டல் செய்யும் வகையில், வடிவேலுவாக பெங்களூரு அணியை மாற்றி "இன்னும் ஒரு சீசன் தோத்தா போதும்.. எதுக்கு தோக்குறதுல குருசாமி ஆகிருவீங்கடா சாலாஸ்" என்று சொல்வதாகவும், அதற்கு வடிவேலு மிரண்டு போவது போல் மீம் உருவாக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு அணி தோல்வி அடைந்து சோகத்தில் இருப்பத்தை சென்னை ரசிகர்கள் பார்த்து ரசிப்பது போல், "ஹேப்பி இன்று முதல் ஹேப்பி” என பாடலுக்கு சென்னை ரசிகர்கள் ஆடுவது போல் மீம் பகிரப்பட்டுள்ளது.

பெங்களூரு அணியிடம் ஒரு கோப்பை கூட இல்லாததை கலாய்த்து, "Breakfast-க்கு சாப்ட முட்டை வேணும் #RCB உங்க கிட்டதான் 17 முட்டை இருக்குல்ல அதுல்ல ஒன்னு குடுங்க" என சென்னை ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், கிரிக்கெட் வீரர்களும், பெங்களூரு அணியை கிண்டல் அடித்து வருகின்றனர். முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பத்ரிநாத் அவரது எக்ஸ் தளத்தில், "இதுக்கு பருத்தி மூட்டை பேசாம Godown-லயே இருந்திருக்கலாம்" என பெங்களூரு அணியை கிண்டல் அடித்து வீடியோ பதிவிட்டுள்ளார்.

அதேபோல், சென்னை அணியின் பந்து வீச்சாளர் துஷர் தேஷ்பாண்டே அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், பெங்களூரு கண்டோன்மெண்ட் (Bengaluru cant) ரயில் நிலையத்தின் புகைப்படத்தை பதிவிட்டு, பெங்களூரு அணியால் கோப்பையை வெல்ல முடியாது (Bengaluru can't) என அந்த புகைப்படத்தின் மூலம் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: IPL 2024: இதை செய்திருந்தால் ஆர்சிபி எலிமினேட்டரில் வென்றிருக்கலாம்! - பெங்களூரு அணி தோல்விக்கான காரணங்கள் என்ன? - IPL 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.