அனந்த்நாக்: ஒட்டுமொத்த நாட்டையும் 6 முதல் 8 பேர் கொண்ட கும்பல் வழிநடத்தி வருவதாகவும் மேலும் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா நியமிக்கப்பட்டு இருப்பதகாவும் காங்கிரஸ் முன்னாள் த்லைவர் ராகுல் காந்தி பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ராகுல் காந்தி இது குறித்து பேசியுள்ளார். அதில் "நாட்டின் ஒட்டுமொத்த வணிக ஒப்பந்தங்கள் 3 முதல் 4 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா தன் வாழ்நாளில் கிரிக்கெட் பேட்டை பிடித்து விளையாடி இருப்பாரா என்று கேட்டால் யாருக்கும் தெரியாது ஆனால் இன்று அவர் தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர்" என்று அந்த வீடியோவில் ராகுல் காந்தி பேசி உள்ளார்.
सारे बिजनेस देश के 3-4 लोगों को ही मिलते हैं।
— Congress (@INCIndia) September 4, 2024
अमित शाह के बेटे ने कभी क्रिकेट बैट नहीं उठाया, वो क्रिकेट का इंचार्ज बन गया है।
: नेता विपक्ष श्री @RahulGandhi
📍 अनंतनाग, जम्मू-कश्मीर pic.twitter.com/wUylZ7QSul
கடந்த வாரம் ஐசிசியின் தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டார். தற்போதைய ஐசிசியின் தலைவர் கிரெக் பார்க்கலேவின் பதவிக் காலம் நவம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் புதிய தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் டிசம்பர் மாதம் முதல் ஐசிசி தலைவராக ஜெய்ஷா பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை அலங்கரிக்கப் போகும் 5வது இந்தியர் ஜெய்ஷா. மேலும், ஐசிசியின் இளம் வயது தலைவரும் ஜெய்ஷா என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என்.சீனிவாசன், ஷசாங்க் மனோகர் ஆகியோர் ஐசிசியின் தலைவர் பதவியில் அங்கம் வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டாப் 10 டெஸ்ட் தரவரிசையில் 2 இந்திய வீரர்கள்! யாரார் தெரியுமா? பாபர் அசாம் கடும் சரிவு! - ICC Test Rankings