ஹைதராபாத்: 2025ஆம் ஆண்டுக்காக ஐபிஎல் போட்டிகளின் 18வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎஸ் போட்டிக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பாக, ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பட்டியலை சமர்பிப்பதற்கு இன்று (அக்.31) மாலை 5 மணி வரை ஐபிஎல் நிர்வாகம் காலம் வழங்கியிருந்தது. இந்நிலையில், தங்கள் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, சிஎஸ்கே அணியில் பலரும் எதிர்பார்த்தபடி தோனியை தக்க வைத்துள்ளது. மேலும் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரானா, சிவம் துபே, தோனி ஆகியோரையும் சிஎஸ்கே அணி தக்க வைத்துள்ளது.
Superfans, here's your Diwali Parisu! 🎁💥
— Chennai Super Kings (@ChennaiIPL) October 31, 2024
An @anirudhofficial Musical ft. IPL Retentions 2025 🥳🎶
#UngalAnbuden #WhistlePodu 🦁💛 pic.twitter.com/FGTXm52v74
இதில் முதல் வீரராக கேப்டன் ருதுராஜை 18 கோடி ரூபாய்க்கும், இரண்டாவது வீரராக பதிரனாவை 13 கோடி ரூபாய்க்கும், மூன்றாவது வீரராக சிவம் துபேவை 11 கோடி ரூபாய்க்கும், நான்காவது வீரராக ரவீந்திர ஜடேஜாவை 18 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்திருக்கிறது. மேலும், ஐந்தாவது வீரராக மகேந்திர சிங் தோனியை அன்கேப்டு (uncapped player) பிளேயர் லிஸ்டில் நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைத்திருக்கிறது. இதன் மூலம் 2025ஆம் ஆண்டு ஐபிஎல்லில் தோனி விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அன்கேப்டு விதி: ஒரு வீரர் கடந்த 5 ஆண்டுகளாக தேசிய அணிக்காக விளையாடாத நிலையில், அவர் அன்கேப்டு வீரராக தக்கவைத்துக் கொள்ள முடியும்.
சிஎஸ்கே அணியில் மீண்டும் ‘தல’ தோனி#CSK #MSDhoni #ipl2025 #ravindrajadeja #ruturajgaikwad #shivamdube #MatheeshaPathirana #ETVBharatTamilnadu pic.twitter.com/i8SqXEMElv
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) October 31, 2024
சிஎஸ்கேவில் ரிஷப்: டெல்லி அணியில் அதிரடி பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் அந்த அணியில் தக்க வைக்கப்படவில்லை. இதனால் வரும் மெகா ஏலத்தில் அவரை எடுக்க சிஎஸ்கே நிர்வாகம் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சிஎஸ்கேவில் விடுவிக்கப்பட்ட பிளேயர்கள்: மொயின் அலி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, மிட்செல் சான்ட்னர், மகீஷ் தீக்ஷனா, ஷர்துல் தாக்கூர், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகிய முக்கியமான வீரர்களை சிஎஸ்கே நிர்வாகம் விடுவித்துள்ளது.
அதேபோல், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, ஷேக் ரஷீத், சிம்ரன்ஜித் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, அவனிஷ் ராவ் ஆரவெல்லி உள்ளிட்ட வீரர்களையும் சிஎஸ்கே நிர்வாகம் விடுவித்துள்ளது. இதில் ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர் ஆகியோரில் ஒருவரை ஆர்டிஎம் பயன்படுத்தி எடுக்க அணி நிர்வாகம் முடிவெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.