ETV Bharat / sports

டாஸ் வென்று வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு! இந்தியாவின் அரைஇறுதி கனவு பலிக்குமா? - Ind vs Ban T20 World Cup Super 8

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 7:51 PM IST

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Etv Bharat
Rohit sharma and Rahul Dravid (Ians Photo)

ஆன்டிகுவா: 9வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று ஆட்டங்களில் நிறைவு பெற்ற நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவாவில் நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் இன்று (ஜூன்.22) பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷான்டோ பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இது பார்க்கப்படுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் வீரர்கள் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சுப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதேபோல் இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரை இறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் வங்கதேசம் அணியும் பலம் வாய்ந்து காணப்படுகிறது.

அந்த அணியில் ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். அரை இறுதி வாய்ப்பில் தொடர வங்கதேசம் அணியும் முனைப்பு காட்டும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இன்றைய ஆட்டத்தில் மழைக்கான வாய்ப்பு துளியும் இல்லை என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆன்டிகுவாவில் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கக் கூடும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல்:

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.

வங்கதேசம்: தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், மஹேதி ஹசன், தன்சிம் ஹசன் சாகிப், முஸ்தபிசுர் ரஹ்மான்.

இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக் 2024: தீவிர பயிற்சியில் இந்திய வீரர், வீராங்கனைகள்.. பயிற்சிக்கு மட்டும் இவ்வளவு தொகை செலவா? - Paris Olympics Indian Players list

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.