சென்னை: சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியின் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருந்த அகமதாபாத் எஸ்.ஜி.பைப்பர்ஸ் மற்றும் யு மும்பா டிடி ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 9-6 என்ற புள்ளி கணக்கில் அகமதாபாத் அணி அபார வெற்றி பெற்றது.
It was Reeth's night! 👑
— Ultimate Table Tennis (@UltTableTennis) August 27, 2024
Reeth Rishya made a splendid comeback to be the @IndianOilcl player of the tie ⏭️ @UMumbaTT 🆚 @SGPipers_AHM
Catch the action live tomorrow at the Jawaharlal Nehru Indoor Stadium. Tickets available on https://t.co/or5ruqsUAS
🔗https://t.co/OG2cOMu4qB… pic.twitter.com/E2w31GPu2j
- தொடக்க ஆட்டமாக நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அகமதாபாத் அணியின் மனுஷ் ஷாவும், மும்பை அணியின் மானவ் தாக்கரும் மோதினர். இதில், மும்பை அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று நேற்றைய போட்டியில் வெற்றி கணக்கைத் தொடங்கியது.
- இதனையடுத்து நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் போட்டியில் ரீத் ரிஷ்யாவும் சுதிர்தா - முகர்ஜியும் மோதினர். இந்த போட்டியில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று மும்பைக்கு பதிலடி கொடுத்தது அகமதாபாத்.
- அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலப்பு இரட்டையர் போட்டியில் அகமதாபாத் அணியின் மனுஷ் மற்றும் பெர்னாடெட் சோக்ஸ் இணை, மும்பை அணியின் மனவ் - ஜியாவோ ஆகியோருடன் மோதினர். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மனுஷ் - பெர்னாடெட் சோக்ஸ் இணை, போட்டியின் முடிவில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
- கடைசியாக நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் போட்டியில் அகமதாபாத் அணியின் பெர்னாடெட் சோக்ஸ், மும்பை அணியின் மரியா ஜியாவோ ஆகியோர் மோதினர். அதில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார் பெர்னாடெட்.
- இறுதியில் அகமதாபாத் அணி மும்பை அணியை 9-6 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம், 24 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பெற்றது அகமதாபாத் எஸ்.ஜி.பைப்பர்ஸ். 21 புள்ளிகளுடன் 3வது இடத்தில் யு மும்பா டிடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Nigerian King is BACK! 👑🧡
— Ultimate Table Tennis (@UltTableTennis) August 27, 2024
📲 Watch IndianOil #UTT2024 live on JioCinema and Sports18 Khel in India and on Facebook Live outside Indiahttps://t.co/q8zuQs7Egfhttps://t.co/p8wlHAyIFP
Tickets available on https://t.co/or5ruqsmLk
🔗https://t.co/OG2cOMtwB3#UTT… pic.twitter.com/AI97x4PldQ
இன்றைய போட்டி: இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள பிபிஜி பெங்களூரு ஸ்மாஷர்ஸ் அணி 4-வது இடத்தில் உள்ள ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா! போட்டியின்றி தேர்வு!