ஹராரே: ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 5 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் சுப்மன் கில் தலைமையில், இந்திய அணி பங்குபெற்றது. இந்த அணியில் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட அணியின் மூத்த வீரர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டு யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், அபிஷேக் சர்மா, துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
4வது டி20 போட்டி: இத்தொடரின் 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நான்காவது போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இப்போட்டி முதல் 3 மூன்று போட்டிகள் நடந்த ஹராரே மைதானத்திலேயே இப்போட்டியும் நடைபெற உள்ளது.
முதல் போட்டியில் இந்திய அணிக்கு எதிர்பாராத சரிவு: தொடரின் முதல் ஆட்டத்தில் எதிர்பாராத விதமாக இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக நடந்த இரண்டாவது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்திலும், மூன்றாவது போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்திலும், இந்திய அணி தனது வெற்றியைப் பதிவு செய்தது.
Match Day! 🙌
— BCCI (@BCCI) July 13, 2024
The action resumes in Harare today as #TeamIndia gear up for the 4th #ZIMvIND T20I 👌👌
⏰ 4:30 PM IST
💻 https://t.co/Z3MPyeL1t7
📱 Official BCCI App pic.twitter.com/j3jKptSMyL
தொடரைக் கைப்பற்றும் முயற்சி: இதனையடுத்து இப்போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா இந்த ஆட்டத்தில் களமிறங்கவுள்ளது. இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தமட்டில் அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில் ஆகியோர் தனது சிறப்பான பங்களிப்பால் பலம் சேர்க்கின்றனர். பவுலிங்கை பொறுத்தவரை, ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் தனது வேகப்பந்து வீச்சினால் எதிரணிக்கு சவால் விடுத்து வருகின்றனர். தனது சுழல் ஜாலத்தால் இத்தொடரில், 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய வாஷிங்டன் சுந்தருடன் சேர்ந்து ரவி பிஷ்னோய்யும் அசத்திவருவது அணிக்கு கூடுதல் பலத்தைச் சேர்க்கிறது.
இந்திய அணியின் உத்தேச பிளேயின் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது.
ஜிம்பாப்வே அணியின் உத்தேச பிளேயின் லெவன்: வெஸ்லி மாதவெரே, டாடிவான்சே மருமானி, பிரையன் பென்னெட், டியான் மயர்ஸ், சிகந்தர் ராசா (கேப்டன் ), ஜோனதன் கேம்ப்பெல், கிளைவ் மடான்டே, வெலிங்டனன் மசகட்சா, பிளஸ்சிங் முஜரபானி, ரிச்சர்ட் என்கராவா, சதரா.
இதையும் படிங்க: 20 வயதில் தொடங்கிய பயணம் 22 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவு..ஓய்வு பெற்றார் ஜேம்ஸ் ஆண்டர்சன்!