ETV Bharat / sports

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம் விளாசி அசத்தல்! - cricket news

NZ VS RSA: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 431 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம் விளாசி அசத்தினார்.

NZ VS RSA
முதல் டெஸ்ட் போட்டி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 2:08 PM IST

நியூசிலாந்து: தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று(பிப்.4) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன் படி நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.

முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 86 ஓவர் முடிவிற்கு 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களைக் குவித்தது. களத்தில் ரச்சின் ரவீந்திரா மற்றும் வில்லியம்சன் ஆகிய இருவரும் களத்தில் இருந்தனர். ரச்சின் ரவீந்திரா 118 ரன்களும், வில்லியம்சன் 112 ரன்களும் எடுத்திருந்தனர்.

அந்த வகையில், நியூசிலாந்து அணி இன்று(பிப்.5) தனது இரண்டாவது இன்னிங்ஸ்ஸைத் தொடங்கியது. 87வது ஓவரில் தொடங்கிய நியூசிலாந்து அணி வீரர்களான வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

இரண்டாவது இன்னிங்க்ஸ்ஸில் 88வது ஓவரில் ரவீந்திரா தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார். அதன்பின் 90வது ஓவரில் பட்டர்சன் வீசிய பந்தை வில்லியம்சன் பவுண்டரி லைன்னுக்கு விளாசி தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார். 94 ஓவர் முடிவிற்கு நியூசிலாந்து அணி 270-2 என்ற கணக்கில் இருந்தது.

நியூசிலாந்து அணிக்கு ரன்களை குவித்த வில்லியம்சன் 95வது ஓவரில் ருவான் டி ஸ்வார்ட் வீசிய பந்தை சமாளிக்க முடியாமல் தேஷ்போவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். வில்லியம்சன் 289 பந்துகளுக்கு 16 பவுண்டரிகள் வீதம் 118 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பின்,டேரில் மிட்செல் - ரச்சின் ஜோடி விளையாடினர். 98வது ஓவரில் டேரில் மிட்செல் தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார். 103 ஓவர் முடிவிற்கு நியூசிலாந்து அணி 300-3 என்ற கணக்கில் இருந்தது.

106வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா 150 ரன்களைக் கடந்தார். 121 வது ஓவரில் டேரில் மிட்செல், பிராண்ட் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.டேரில் மிட்செல் 75 பந்துகளுக்கு 3 பவுண்டரிகள் வீதம் 34 ரன்கள் எடுத்திருந்தார். பின்னர் டாம் ப்ளன்டெல் களம் கண்டார். வந்த வேகத்தில் டாம் ப்ளன்டெல் 127வது ஓவரில் 11 ரன்கள் எடுத்து தனது ஆட்டத்தை இழந்தார். பின்னர், க்ளென் பிலிப்ஸ் களம் கண்டார்.

நியூசிலாந்து அணிக்கு ரன்களை குவித்த நிலையில் ரச்சின் ரவீந்திரா 130வது ஓவரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். 131 ஓவர் முடிவிற்கு 408-5 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி இருந்தது.

138வது ஓவரில் க்ளென் பிலிப்ஸ், நீல் பிராண்ட் வீசிய பந்தில் தனது ஆட்டத்தை இழந்தார். அடுத்து சான்ட்னர் களமிறங்கினார். பின்னர் அணிக்கு ரன்களை குவித்த ரச்சின் நீல் பிராண்ட் வீசிய பந்தில் தனது ஆட்டத்தை இழந்தார். 366 பந்துகளுக்கு 240 ரன்கள் எடுத்து இந்த போட்டியில் சிறப்பாக விளையாடினார்.

பின்னர் ஜேமிசன் களமிறங்கினார். சான்ட்னர் சொற்ப ரன்களில் அவுட் ஆக, மாட் ஹென்றி களம் கண்டு 9 பந்துகளுக்கு 27 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் சவுத்தி, ஜேமிசன் உடன் விளையாடினார். சவுத்தி வந்த வேகத்தில் ரன்கள் எதும் எடுக்காமல் பெவிலியன் நோக்கிச் சென்றார். இதனால் நியூசிலாந்து அணி 144 ஓவர் முடிவிற்கு 511 ரன்கள் எடுத்து தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா இரட்டை சதங்களை விளாசி அணிக்கு ரன்களை குவித்தார். மேலும், வில்லியம்சன் 118 ரன்கள் எடுத்து ரன்களை குவித்தார். தென்னாப்பிரிக்கா அணியில், நீல் பிராண்ட் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். ருவான் டி ஸ்வார்ட் 2 விக்கெட்டுகளையும் , டேன் பேட்டர்சன், தேஷ்போ ஆகிய இருவரும் 1 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினர்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்கவீரர்களான எட்வர்ட் மூர் - நீல் பிராண்ட் ஆகிய இருவரும் விளையாடினர். முதல் ஓவரில் மூர் தனது முதல் பதிவு செய்தார். பின்னர், நீல் பிராண்ட் 23 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுத்து 10வது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரேனார்ட் வான் டோண்டர் எல்பிடபிள்யூ ஆனார்.

பின்னர், ஹம்சா - மூர் களத்தில் இருந்தனர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், மூர் 15வது ஓவரில் 50 பந்துகளுக்கு 23 ரன்கள் எடுத்து பெவிலியன் சென்றார். பின்னர் டேவிட் பெடிங்காம் களம் கண்டார். டேவிட் பெடிங்காம் மற்றும் ஹம்சா சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

19 ஓவர் முடிவில் 53-3 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி இருந்தது. 28வது ஓவர் முடிவில் இன்றைய போட்டி நிறைவு பெற்றது. களத்தில் கீகன் பீட்டர் சன் மற்றும் டேவிட் பெடிங்காம் ஆகிய இருவரும் உள்ளனர். தென்னாப்பிரிக்கா அணி இன்றைய நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்துள்ளது.

இதையும் படிங்க: 2வது டெஸ்ட்; இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.