ஐதராபாத் : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கலாகிறது. ஏப்ரல் - மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ள நிலையில், அதனிடையே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகள் இருக்கலாம் என எதிர்பார்ப்புகளை கிளப்பி உள்ளது.
2019ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட் தேர்தலை எதிர்கொள்ள அரசுக்கு புது அடித்தளத்தையும், அளவுகோலையும் ஏற்படுத்திக் கொடுத்தது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசின் பிரதம மந்திரியின் கிஷான் சம்மான் நிதி யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த திட்டத்தின் மூலம் 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நாடு முழுவதும் பிரதம மந்திரி கிஷான் திட்ட நிதியின் முதல் தவணை செலுத்தப்பட்டது. இந்த திட்டம் லட்சக்கணக்கான விவசாயிகளிடையே கவனத்தை ஈர்த்தது. அதேபோன்ற திட்டம் 2024 இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரிலும் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
2024 இடைக்கால பட்ஜெட்டில் விவசாயம் குறித்த எதிர்பார்ப்புகள்:
இடைக்கால பட்ஜெட் சுற்றுச்சூழல் அமைப்பின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்குமா என்ற எண்ணத்தை தூண்டி உள்ளது. மேலும், குறைந்த வட்டியிலான கடன் அறிவிப்பே விவசாயிகளின் பிரதான எதிர்பார்ப்பாக இருக்கும். விவசாய பொருட்கள், வேளாண் உபகரணங்கள், நீர் பாசன் கருவிகள் மற்றும் நீண்ட முதலீடுகள் தொடர்பாக அதிக மானியம் கொண்ட அளவில் கடன் உதவிகள் வழங்குவது தொடர்பான அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவதாக, வேளாண் வளர்ச்சியில் பயிர் காப்பீடு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் பயிர்க் காப்பீட்டு திட்டங்களை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது. விவசாய தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் தருவாயில் நாடு உள்ளது.
நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இன்றிமையாத பணியை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக புதிய பாசன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் இடப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலான புதுப்பிக்கத்தக்க விவசாய நுணுக்க முறைகளை ஊக்குவிக்கும் வகையில் மானியங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நாட்டில் விற்பனைக்கு முந்தைய மற்றும் பிந்தைய வேளாண் உள்கட்டமைப்புகளில் போதிய முதலீடுகள் இல்லை, உதாரணமாக தரம் பரிசோதனை, மண் கண்காணிப்பு உள்ளிட்ட தரவுகள் முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாக பெரிய அளவிலான மண் பரிசோதனை நிலையங்களின் தேவைகள் அதிகரித்து உள்ளன.
மேலும், குடோன்கள், குளிரூட்டப்பட்ட கிட்டங்கிகள், குறைந்த சேதாரங்களை ஏற்படுத்தக் கூடிய வகையிலான போக்குவரத்து நடைமுறைகளின் தேவைகள் அதிகரித்து உள்ளன. இந்த உள்கட்டமைப்பு வசதிகளை விரைவாக மேற்கொள்ள தவறும் பட்சத்தில் விவசாய சுற்றுச் சூழல் அமைப்பில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இடைக்கால பட்ஜெட்டில் கிட்டங்கி வசதிகள், குளிரூட்டப்பட்ட கிடங்குகள், முதற்கட்ட வேளாண் பொருட்கள் பேக்கிங் செய்யும் இடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவசாய உள்கட்டமைப்புகளுக்கு இடைக்கால பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட்டில் இறக்குமதி மாற்று அளவு என்பது முக்கிய கருப்பொருளாக இருக்க வேண்டும், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள் மற்றும் காய்கறிகள் மீதான இறக்குமதி மாற்று இன்னும் அதிகமாக உள்ளதால் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக 2024-2025 ஆண்டில் இந்தியா சுமார் ஒரு மில்லியன் டன் பருப்பை இறக்குமதி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பருப்பு பயிர்களின் பரப்பளவு குறைந்து வருவதால் உள்நாட்டு உற்பத்தி குறையும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. துவரம் பருப்பு சாகுபடி பெருவாரியான அளவில் குறைந்து இருப்பதன் காரணமாக இறக்குமதி அளவை பெருக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
துவரம் பருப்பு உற்பத்தி உள்நாட்டில் பெருமளவுக்கு குறைந்து இருப்பதே இறக்குமதிக்கான தேவையை அதிகரித்து உள்ளது. பெரும்பாலும் பருப்பு தேவையை பூர்த்தி செய்து கொள்ள இந்தியா ஆப்பிரிக்க நாடுகளை எதிர்நோக்கி உள்ளது. நாட்டில் துவரம் பருப்பு உற்பத்தியில் மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தர பிரதேசம் மாநிலங்கள் முக்கிய பங்காற்றும் நிலையில், நடப்பாண்டில் பருவமழை தவறுதல் மற்றும் வறட்சி காரணமாக பருப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
2022 - 23 நிதி ஆண்டில் துவரம் பருப்பு உற்பத்தில் என்பது 3 புள்ளி 4 மெட்ரிக் டன் என்ற அளவில் இருந்ததாகவும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 19 சதவீதம் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முந்தைய ஆண்டில் 4 புள்ளி 2 மெட்ரிக் டன் பருப்பு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளின் வருமானத்திற்கான ஆதாரங்களை ஊக்குவிக்க திட்டம்:
கரோனா தொற்றுக்கு பிறகு இயற்கை விவசாயம் விரைவான வளர்ச்சியைக் கண்டு உள்ள நிலையில் அதை நிலைப்படுத்தக் கூடிய வகையில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை பட்ஜெட்டில் வழங்க வேண்டும். உளுந்து மற்றும் தினை உள்ளிட்ட தானிய பயிர்களின் சாகுபடியை அதிகரிக்கும் வகையில் பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை அடைய உதவுமாறு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட வேண்டும்.
விவசாயத்தில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவின் பயன்பாடு:
2024 பட்ஜெட் விவசாயத்தில் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் பயன்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய வகையில் இருக்க வேண்டும். வானிலை, அனைத்திந்திய விலைகள் மற்றும் அரசாங்கக் கொள்கைகள் குறித்து விவசாயிகளுடன் அதிக தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, விவசாயிகளுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் சிறந்த முடிவுகளை எடுப்பதிலும் அதன் மதிப்பு நீண்ட தூரத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடி சந்தை மூலம் விற்க உதவுவது பற்றி நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் நிலையில் பட்ஜெட்டில் அதை செயல்படுத்தும் வகையில் திட்டமிடல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, விவசாய தொழில்முனைவோரை உருவாக்கும் நேரம் இது என்பதால், சந்தையில் ஏற்கனவே உள்ள வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
இதையும் படிங்க : பேடிஎம்க்கு தடையா? ரிசர்வ் வங்கி உத்தரவு என்ன? வாடிக்கையாளர்களுக்கு என்ன பிரச்சினை?