ETV Bharat / international

'ரஷ்யா என்ன நினைத்ததோ அவர்களுக்கே அது திருப்பி விடப்பட்டது' - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி! - RUSSIA UKRAINE WAR - RUSSIA UKRAINE WAR

Volodymyr Zelensky Independence day speech: எங்களது நிலத்தில் தீமையை விதைக்க விரும்புபவர்கள் அதன் பலனை அவர்களது பிரதேசத்தில் அறுவடை செய்வார்கள் என்று ரஷ்யாவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பதிலடி கொடுத்துள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் பிரதமர் மோடி (கோப்புப்படம்)
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் பிரதமர் மோடி (கோப்புப்படம்) (credit - AFP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 6:38 PM IST

கீவ்: உக்ரைன் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி அதிபர் ஜெலென்ஸ்கி வீடியோ வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் உணர்ச்சிகரமாக பேசிய அவர், உக்ரைனை அழிக்க ரஷ்யா விரும்பியதாகவும், ஆனால் அவர்களுக்கே அதை திரும்பி அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், ஆகஸ்ட் 6 அன்று உக்ரேனியப் படைகள் ரஷ்யாவிற்குள் நுழைந்து உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பகுதியில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து அந்த வீடியோவை பதிவு செய்வதாகவும் அவர் கூறினார். பழிவாங்கல் என்றால் என்ன என்பதை ரஷ்யா அறிந்து கொள்ளும் என்றும் சபதம் செய்த ஜெலென்ஸ்கி, இன்று நாம் உக்ரைனின் 33வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம், எதிரி நம் நிலத்திற்கு கொண்டு வந்ததை, இப்போது அவர்களது வீட்டிற்கே திருப்பிவிடப்பட்டது என்றார்.

எங்களது நிலத்தில், தீமையை விதைக்க விரும்புபவர்கள் அதன் பலனை அவர்களது பிரதேசத்தில் அறுவடை செய்வார்கள். இது ஒரு கணிப்பு அல்ல, மகிழ்ச்சியல்ல, கண்மூடித்தனமான பழிவாங்கல் அல்ல, இதுதான் நீதி. புதின் சிவப்பு சதுக்கத்தைச் சேர்ந்த ஒரு நோய்வாய்பட்டவர். அவர் சிவப்பு பொத்தானைக் கொண்டு அனைவரையும் அச்சுறுத்தி வருகிறார்'' என ஜெலென்ஸ்கி அந்த வீடியோவில் கூறினார்.

இதையும் படிங்க: உக்ரைன் சென்றடைந்த பிரதமர் மோடி.. ஆரத்தழுவி வரவேற்ற அதிபர் ஜெலன்ஸ்கி; கையெழுத்தான மூன்று ஒப்பந்தங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.