ETV Bharat / international

ரஷ்ய ஆதரவு ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு: என்ன காரணம்? உலக தலைவர்கள் கண்டனம்! - Slovakia PM Shot - SLOVAKIA PM SHOT

ஸ்லோவாக்கிய பிரதமர் ராபர்ட் பிகோ மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அமெரிக்கா அதிபர் பைடன், ரஷ்ய அதிபர் புதின், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Slovakia PM Robert Fico (AP Photo)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 6:50 AM IST

டெல்லி: ஸ்லோவாக்கியாவின் ஹண்ட்லோவா நகரில் நடைபெற்ற அரசு கூட்டத்தில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் ராபர் பிகோ மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். ஏறத்தாழ 4 முறை அந்த நபர் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படும் நிலையில், இதில் ராபர்ட் பிகோவின் வயிறு உள்ளிட்ட பகுதிகளை தோட்டக்கள் துளைத்தன.

குண்டு காயம் ஏற்பட்டு தரையில் சுருண்டு விழுந்தவரை அருகில் இருந்த அவரது பாதுகாவலர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராபட் பிகோ வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவும், அதேநேரம் அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றும் ஸ்லோவாக்கியா துணை பிரதமர் தெரிவித்து உள்ளார்.

வயிறு மற்றும் மூட்டு பகுதிகளை துப்பாக்கி குண்டுகள் துளைத்ததால் அந்த காயங்களால் அவருக்கு தீவிரத்தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை சம்பவ இடத்திலேயே கைது செய்த போலீசார், என்ன காரணத்திற்காக அவர் துப்பாக்கியால் சுட்டார் என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் யார், எதற்காக அவர் துப்பாக்கியால் சுட்டார் என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது கடந்த 2023ஆம் ஆண்டு முதல் ஸ்லோவாக்கியா பிரதமராக இருந்து வரும் ராபர்ட் பிகோ (வயது 59) இயல்பாகவே ரஷ்யா சார்புடையவர் எனக் கூறப்படுகிறது.

ராபர்ட் பிகோ மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கண்டனமும், அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகளும் தெரிவித்துள்ளனர்.

நான்கு முறை ஸ்லோவாக்கியா பிரதமராக ராபர்ட் பிகோ இருந்து உள்ளார். இந்நிலையில், அமெரிக்கா அதிபர் பைடன் வெளியிட்டுள்ள பதிவில், "ஸ்லோவாக்கிய பிரதமர் ராபர்ட் பிகோ மீதான தாக்குதல் பற்றிய செய்திகளை கேட்டு நான் கவலையடைந்தேன். ராபார் பிகோ விரைவாக குணமடைய நானும், ஜில் பைடனும் பிரார்த்தனை செய்கிறோம்.

எங்கள் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ஸ்லோவாக்கியா மக்களுடனும் உள்ளன. இந்த கொடூரமான வன்முறைச் செயலைக் கண்டிக்கிறோம். எங்கள் தூதரகம் ஸ்லோவாக்கியா அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது மற்றும் உதவ தயாராக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். மேலும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோரும் ராபர்ட் பிகோ விரைந்து குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கேட்ஸ் அறக்கட்டளையில் இருந்து விலகினார் பில் கேட்ஸின் முன்னாள் மனைவி! - MELINDA EXITS FROM GATES FOUNDATION

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.