ETV Bharat / international

மியான்மர் ராணுவ விமானம் மிசோரத்தில் விபத்து: பயணித்தவர்களின் கதி என்ன?

மியான்மர் ராணுவ விமானம் மிசோரத்தில் தரையிறங்க முயன்ற போது விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Myanmar Army Plane Crash
Myanmar Army Plane Crash
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 1:22 PM IST

Updated : Jan 23, 2024, 8:14 PM IST

லெங்குபி : மியான்மர் ராணுவ விமானம் மிசோரத்தில் தரையிறங்க முயன்ற போது விபத்துக்குள்ளானதில் 6 பயணிகள் படுகாயம் அடைந்தனர். மியான்மரில் இருந்து விமானியுடன் சேர்த்து 14 பேருடன் சிறிய ரக ராணுவ விமானம் புறப்பட்டு உள்ளது. மிசோரம் மாநிலம் லெங்குபியில் விமானம் தரையிறங்க முயன்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 6 பயணிகள் படுகாயம் அடைந்ததாகவும் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் மிசோரம் போலீசார் தெரிவித்து உள்ளனர். விமானத்தில் பயணித்த மீதமுள்ள 8 பயணிகளும் எந்தவித உயிர்சேதமும் இன்றி உயிர் பிழைத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டதா அல்லது வேறெதும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மியான்மர் நாட்டு விமானம் மிசோரம் பகுதியில் விபத்துக்குள்ளானது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : அமெரிக்கா துப்பாக்கிச் சூடு : 8 பேர் கொலை! என்ன காரணம்?

Last Updated : Jan 23, 2024, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.