தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்டோர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்நிலையில், இவ்விபத்து நடந்து 17 மணி நேரத்திற்கு பின்னர், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் உதிரிபாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ஈரான் செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டன. இதையடுத்து, ஈரான் நாட்டின் அரசியல் சாசனத்தின் படி, புதிய அதிபராக முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்லாமிய நாடான ஈரான் நாட்டின் அதிபராக இருந்தவர், இப்ராஹிம் ரைசி. இந்நிலையில், நேற்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்டோர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 9 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு - Iran President Ebrahim Raisi Died
இந்நிலையில், ஈரான் நாட்டின் அரசியல் சாசனப்படி, 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன்படி, ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக, அந்நாட்டின் துணை அதிபராக உள்ள முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
BREAKING: Iran's Vice President Muhammad Mukhbar is set to take over as acting president, pending the approval of the Supreme Leader, following the death of Ebrahim Raisi in a helicopter crash, with the constitution stipulating a new president must be elected within 50 days. pic.twitter.com/mfeam8ig1N
— The Spectator Index (@spectatorindex) May 20, 2024
ஈரான் நாட்டின் அதிபர் கிழக்கு அஜர்பைஜான் மாகணத்தில் அந்நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே வானில் பறந்து கொண்டிருந்ததபோது இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, விபத்து நடந்த அஜர்பைஜான் மலைப்பகுதியில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததாக தெரியவருகிறது.
இந்நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்த நிலையில், ஈரானின் புதிய காபந்து அதிபராக முகமது முக்பர் அடுத்த 50 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அறிவிப்பு! - Iran President Raisi Passed Away