சென்னை: ஒருவரை அழகாகக் காண்பிக்கும் ஆடை அழகியலில் நிறம் மிக முக்கியமான ஒன்று. அதை விட அந்த ஆடை அணியும்போது தங்களுக்குள் வரும் தன் நம்பிக்கைதான் அதை விட மிக முக்கியம். கருப்பு நிறம் உடைய ஆண்களும் சரி பெண்களும் சரி பிறரை ஈர்க்கும் முக பாவத்தைக் கொண்டிருப்பார்கள்.
அவர்களுக்கு ஆடையும் சரியாக சூட் ஆகிவிட்டால் அழகில் அவர்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்றே கூறலாம். அந்த வகையில் கருப்பு நிற ஆண்கள் எந்த நிறத்தில் உள்ள ஆடைகளைத் தேர்வு செய்து அணியலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Formals ஆடையின் நிறங்களைத் தேர்வு செய்யும்போது: அலுவலகத்திற்கு பெரும்பாலும் Formals ஆடைகளைத்தான் அணிந்து செல்வார்கள். சட்டைகள் மற்றும் அதற்கு எதிர் நிறத்தில் பேன்ட்களை தேர்வு செய்து அணிய வேண்டும். உங்கள் உயரம், உடல் வாகு உள்ளிட்டவைகளை பொருத்து ஆடைகள் அணிவதன் அழகில் சிறு மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் பொதுவாகக் கீழே கூறப்படும் அனைத்து நிறங்களும் கருப்பு நிறத்தில் உள்ள ஆண்களின் Formals ஆடைகளுக்குக் கட்டாயம் ஒத்துப்போகும்.
சட்டைகளைத் தேர்வு செய்யும்போது :
- சந்தன நிறம்
- க்ரே நிறம்
- இளம் லைட் பிரவுன்
- ஹாஃப் வைட்
- லைட் சாக்லெட் பிரவுன்
- இளம் மஞ்சள் நிறம் அதாவது மிகவும் லைட்டாக இருக்க வேண்டும்
- இளம் பச்சை நிறம் அதாவது கஸ்டர்டு ஆப்பிள் நிறத்தில் லைட் வகை
- இளம் நீலம் நிறம், இதில் இருக்கும் அத்தனை ஷேடுகளும் ஒத்துப்போகும்
இந்த வகை நிறங்களில் நீங்கள் சட்டைகளைத் தேர்வு செய்து பேன்ட் மற்றும் ஜீன் அதற்கு ஏற்றார்போல் தேர்வு செய்யுங்கள். மேலும் casuals என்று வரும்போது சிவப்பு, கருப்பு, வெள்ளை போன்ற மிக்சட் களர்களில் டீ ஷர்ட் மற்றும் அதற்கு ஏற்ற ஜீன் உங்களுக்கு மிகவும் அருமையாக இருக்கும் அதில் சந்தேகம் வேண்டாம்.
அதேபோல, முன்பு கூறப்பட்ட நிறங்களின் செக்டு ஷர்டுகள், பிரின்டடு ஷர்டுகள் உள்ளிட்டவையும் உங்களுக்கு ஒத்துப்போகும். ஆடை அணிந்து அதற்கு ஏற்றார்போல் கால்களில் ஷூ அல்லது சப்பல்ஸ் அணி வேண்டும். கைகளில் மிகவும் போல்டாக ஒரு வாட்ச் கட்டினால் அவ்வளவுதான் உங்கள் உலகத்தில் நீங்கள்தான் ராஜா.
இதையும் படிங்க: உஷார் மக்களே.. ஹோட்டல்ல இதெல்லாம் வாங்கி சாப்பிடாதீங்க..! - 5 things you should never order at a restaurant