ETV Bharat / health

'டீன் ஏஜ் காதல்' சரியா? தவறா? குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டியதும்.. பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டியதும்.! - Teenage love right or wrong - TEENAGE LOVE RIGHT OR WRONG

'பதின்பருவ காதல்' இதைக் கையாளுவது பெற்றோருக்கும் சரி குழந்தைகளுக்கும் சரி மிகவும் சிக்கலான விஷயம்தான். பெற்றோருக்கு கோவத்தையும், குழந்தைகளுக்கு ஆசையையும் தூண்டும் இந்த பதின்பருவ காதலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.

டீன் ஏஜ் காதல் கோப்புப்படம்
டீன் ஏஜ் காதல் கோப்புப்படம் (Credit: Getty image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 1, 2024, 1:45 PM IST

சென்னை: பிரபலமான காதல் வரலாறுகளைப் புரட்டிப்பார்த்தால் லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட், அம்பிகாபதி அமராவதி இவர்களின் பெயர் இல்லாத காதல் காவியங்களைப் பார்க்கவே முடியாது. இவர்கள் அனைவரும் வெவ்வேறு காலகட்டங்களின் காதலர்களாக இருந்திருந்தாலும் அவர்களுக்கு அனைவருக்கும் பொதுவான ஒரு ஒற்றுமை இருக்கிறது.

இவர்கள் அனைவருமே பதின்பருவ காதலர்கள். அதாவது இன்றைய பள்ளிப் பருவ காதலர்கள்தான். அவர்கள் மட்டும் அல்ல பொதுவாக அனைவருக்குமே பதின்பருவத்தில் காதல் என்பது கண்டிப்பாக மலர்ந்திருக்கும். இது தவறா? இல்லை சரியா? எனக்கேட்டால்.. பசி, தூக்கம் உள்ளிட்ட இயல்பான விஷயம்போல் பதின்பருவ காதலும் சாதாரணமான ஒன்றுதான். ஹார்மோன் மாற்றத்தால் மட்டுமே இதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அந்த காலகட்டத்தில் திருமண வயது என்பது 16 வயதைத் தாண்டாது. அதற்கு முன்னதாகவே திருமணம் நடந்துவிடும். இதனால் காதல் மற்றும் அதனால் வரும் பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்ள வேண்டிய சூழலும் இல்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் 25 வயதிற்கு மேல்தான் பொதுவாக அனைவரும் திருமணம் செய்கிறார்கள். எதிர்காலத்தை முறையாகத் திட்டமிட்டுக் கொண்டு செல்ல அனைவரும் முயற்சிக்கும் சூழலில், இந்த பதின்பருவ காதல் அதற்குத் தடையாக இருந்துவிடுமோ என்ற அச்சம் பெற்றோருக்கு.

பதின்பருவம் என்றாலே கத்தியின் மேல் நடப்பதுபோன்றது எனக்கூறுவார்கள். பாதி குழந்தையாகவும், மீதி பெரியவர்களாகவும் இருக்கும் காலகட்டம் அது. உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் இதுபோன்ற சூழலில், காதல் வசப்படுவது என்பது இயல்பான ஒன்றுதான் என மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

டீன் ஏஜ் காதல் எப்படி இருக்கும்.. மருத்துவர்கள் கூறுவது என்ன? 13 வயது முதல் 19 வரையிலான காலகட்டத்தைத்தான் டீன் ஏஜ் அல்லது பதின்ம பருவம் எனக்கூறுகிறோம். இந்த வயதில் ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகள் என இரு பாலருக்கும் உடல் மற்றும் மனதளவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம். தங்களை மிகவும் அழகானவர்களாகவும், இந்த உலகமே தங்களைக் கவனிப்பது போன்றும் உணருவார்கள். அவர்களின் பேச்சு, செயல்பாடு உள்ளிட்ட அனைத்திலும் மாற்றம் ஏற்படும்.

அது மட்டும் அல்ல, பதின்பருவத்தில் கழுதை கூட மான் போலும் காக்கை கூட மயில்போலும் தெரியும் என வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். அதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் என்னவென்றால், ஹார்மோன் மாற்றத்தால் அவர்களின் ஆற்றல் மிகவும் அதிகமாகவும், எண்ணங்கள், சிந்தனைகள் அனைத்தும் புதுவிதமாகவும் துளிரும். இதைச் சரியான வழியில் கொண்டு சென்றால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

ஆனால், அதே காலகட்டத்தில்தான், காதல் என்ற ஒரு உணர்வும் துளிர்க்கும். அது புதுவித இன்பத்தைத் தரும்போது குழந்தைகள் அதற்கு அடிமையாகி விடுகிறார்கள். ஆனால், இது வெறும் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்பட்ட காதல்தான் என்பதைப் பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் எடுத்துக்கூற வேண்டும்.

அப்படிக் கூறினாலும் சில நேரங்களில் அவர்கள் தங்கள் காதல் மிகவும் உண்மையானது, புனிதமானது என்ற எண்ணத்தில் இருந்து அவர்கள் வெளியே வருவது மிகவும் கடினம். இந்த சூழலை மிகவும் பொறுமையாகக் கையாள வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கும் நிலையில் என்ன செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

காதலில் சிக்கிக்கொண்ட உங்கள் குழந்தையிடம் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய சிலவற்றை:

  • உங்கள் குழந்தையிடம் நண்பராக இருங்கள்
  • குழந்தையை உங்களிடம் பேச அணுமதியுங்கள்
  • காதல் விவகாரம் தெரிய வரும்போது கோவப்பட வேண்டாம்
  • அவர்களின் உணர்வுகளை மதித்து தெளிவான விளக்கம் கொடுங்கள்
  • காதல் மற்றும் ஈர்ப்புக்கு இடையே உள்ள வேறுபாடு குறித்து நிதானமாக அவர்களுக்கு புரிய வையுங்கள்
  • காதல் மற்றும் அதனால் வரும் விளைவுகள் குறித்து சொல்லிக்கொடுங்கள். ஆனால் அது அறிவுறைபோல் இருக்கக்கூடாது
  • திருமணத்திற்கு பின் வரக்கூடிய பொறுப்புகள் மற்றும் பொருளாதார பிரச்சனைகள் குறித்து தெரியப்படுத்துங்கள்
  • வெளி உலகம், சமூகம் தொடர்பான விஷயங்களையும், பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் சொல்லிக்கொடுங்கள்
  • உங்கள் குழந்தை ஒரு நண்பருடன் பழகாமல், குழுவாக நண்பர்களை வைத்துக்கொள்ள அறிவுறுத்துங்கள்
  • டீன் ஏஜர்களின் எணர்ஜி லெவல் மிக அதிகம்.. அதை நல்ல வழியில் கொண்டு செல்ல அவர்களை வழிநடத்துங்கள்
  • காதல் விஷயத்தில் அதிக கோவமும் வேண்டாம், அலட்சியமும் வேண்டாம், இரண்டுக்கும் நடுவே நிதானமாக இருங்கள்

இதையும் படிங்க: சண்டை போட்டாலும் காதல் குறையாமல் இருக்க வேண்டுமா? உங்களுக்காகத்தான் இந்த தகவல்.! - Romantic Things To Do With Partner

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.