ETV Bharat / health

வேகவைத்த முட்டை Vs ஆம்லெட்...உடல் எடையை குறைக்க எது சிறந்தது? - EGGS FOR WEIGHT LOSS - EGGS FOR WEIGHT LOSS

EGGS FOR WEIGHT LOSS: முட்டையில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்தாலும், முட்டை சாப்பிடுவதால் கலோரிகள் அதிகரிக்கும் என்று சிலர் அச்சப்படுகிறார்கள். நீங்களும் அப்படி நினைத்தால், இன்றே உங்கள் குழப்பத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits: ETVBharat)
author img

By ETV Bharat Health Team

Published : Aug 25, 2024, 7:58 PM IST

ஐதராபாத்: சத்தான உணவுகள் என்றாலே ஒரு அடி தள்ளி போகும் சிலருக்கு கூட பிடித்த உணவாக இருப்பது முட்டை தான். அப்படி, முட்டை கிடைத்துவிட்டால் போதும், அவித்த முட்டை, ஆம்லெட், ஆப்பாயில், முட்டை பொடிமாஸ் என விதவிதமாக செய்து சாப்பிடுகிறோம். ஆனால், முறையாக முட்டையை சாப்பிடுவதால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

முட்டையில் இருக்கும் சத்துக்கள்:

புரதம்
இரும்புச்சத்து
வைட்டமின் ஏ, ஈ, பி6
வைட்டமின் டி
மெக்னீசியம்

வேகவைத்த முட்டைகளை உண்ணுங்கள்: முட்டையில் கலோரிகள் மிக குறைவாக இருப்பதால், பொரித்த முட்டைகளுக்கு பதிலாக வேகவைத்த முட்டைகளை உண்ண வேண்டும். வேகவைத்த முட்டைகளை சாப்பிடுவதால் புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றன.

முட்டையை எப்படி சாப்பிடலாம்?: காலை உணவாக சாலட் எடுத்துக்கொள்ளும் போது, புரதம் மற்றும் சுவை அதிகரிக்க வேகவைத்த முட்டைகளை உட்கொள்ளலாம். அல்லது, தினமும் இரண்டு முட்டைகளை காலை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.

காய்கறிகளை சாப்பிட விரும்பாதவர்கள், சமைக்கும் போது கீரை, காளான் போன்ற காய்கறிகளுடன் முட்டையை பயன்படுத்தலாம். ஓட்ஸ் மற்றும் காய்கறிகளை சேர்த்து குறைவான எண்ணெய் பயன்படுத்தி சத்தான ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.

தினமும் எத்தனை முட்டை சாப்பிடலாம்?: முட்டையில் சத்துக்கள் அதிகமாக இருந்தாலும், அளவிற்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் தீமையை விளைவிக்கிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். ஒன்று முதல் இரு முட்டைகளை எடுத்துக்கொள்ளலாம் எனக்கூறும் மருத்துவர்கள், இரு முட்டைகளின் வெள்ளை கருவையும், ஒரு முட்டையின் மஞ்சள் கருவையும் எடுத்துக்கொள்ளலாம் என பரிந்துரைக்கின்றனர்.

அச்சம் வேண்டாம்: 'முட்டையில் அதிக அளவு புரதம் உள்ளது, ஆனால் சிலருக்கு மஞ்சள் கரு சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது' எனக்கூறும் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார், 'இது உண்மையல்ல. முட்டையில் கொலஸ்ட்ரால் உள்ளது, ஆனால் இது நல்லக் கொலஸ்ட்ரால், இது இரத்தக் கொழுப்பை அதிகரிக்காது' என தெரிவித்துள்ளார்.

வைட்டமின்கள் நிறைந்த முட்டை: முட்டையில் உயர்தர புரதங்கள் உள்ளன. புரதங்கள் எடை குறைப்பின் போது தசை சமநிலையை பராமரிக்க உதவுகின்றன மற்றும் உடல் குறைக்கும் முயற்சியின் ஆரம்பகாலத்தில் ஏற்படும் பசியை கட்டுப்படுத்துகிறது. முட்டையில் வைட்டமின் டி, வைட்டமின் பி12, கோலின் மற்றும் செலினியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

இதையும் படிங்க: உங்க காபியில் நெய் இருக்கா?..நெய் காபி குடிப்பதால் கிடைக்கும் 5 அற்புத நன்மைகள் என்ன? - GHEE COFFEE BENEFITS

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.