சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 12 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக செலவு செய்ததாக தயாரிப்பாளர் சங்கம் நடிகர் விஷால் மீது புகார் வைத்து, இனிவரும் காலங்களில் அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கம் வைத்த குற்றச்சாட்டிற்கு விஷால் விளக்கமளித்துள்ளார்.
Don't u know that it is a collective decision which includes the person in your team,“Mr kathiresan” and the funds were used for the welfare works of the old/struggling members of the producers council that includes providing education, medical insurance and basic welfare during…
— Vishal (@VishalKOfficial) July 26, 2024
அதில், "அந்த பணத்திற்கான செலவு உங்கள் சங்கத்தில் உள்ள கதிரேசன் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு கூட்டு முடிவு. அந்த நிதியானது கல்வி, மருத்துவக் காப்பீடு மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் முதியோர் அல்லது போராடும் உறுப்பினர்களின் நலப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டது என்பது உங்களுக்கு தெரியாதா? அதேபோன்று உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் பயன்பெறும் வழியில் பண்டிகைகளின் போது அடிப்படை நலத்திட்ட உதவிகளுக்காக பயன்படுத்தப்பட்டது.
துறைக்காக உழைக்க நிறைய இருக்கிறது. இரட்டை வரிவிதிப்பு, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டியவை உள்ளது. எனவே, உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள். விஷால் தொடர்ந்து படங்களில் நடிப்பார். திரைப்படங்களை ஒருபோதும் தயாரிக்காத தயாரிப்பாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களே, முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள். முதலில் படிப்படியாக சிந்தியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "மிக மோசமான அரக்கன் மனிதன்".. யோகி பாபு நடிக்கும் போட் பட ட்ரெய்லர் வெளியானது! - BOAT movie trailer out