ETV Bharat / entertainment

கரூரில் 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட 'கோட்' பட டிக்கெட்கள்; பின்னணியில் த.வெ.க. நிர்வாகிகள்? - GOAT movie tickets

Karur GOAT movie tickets: கரூரில் உள்ள நான்கு திரையரங்குகளில் திரையிடப்பட்ட விஜய் நடித்த கோட் திரைப்படத்திற்கு அதிக விலையில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோட் திரைப்படம் பார்க்க கரூர் திரையரங்கில் குவிந்த ரசிகர்கள்
கோட் திரைப்படம் பார்க்க கரூர் திரையரங்கில் குவிந்த ரசிகர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 5, 2024, 4:46 PM IST

கரூர்: வெங்கட் பிரபு இயக்கத்தில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள 'கோட்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லோரா, அமுதா, திண்ணப்பா, கலையரங்கம் ஆகிய நான்கு திரையரங்குகளில் விஜய் நடித்த கோட் திரைப்படம் வெளியாகி உள்ளது.

கரூரில் அதிக விலைக்கு விற்கப்பட்ட கோட் பட டிக்கெட் (Credits - ETV Bharat Tamil Nadu)

முதல் நாளான இன்று முதல் காட்சி காலை 10 மணிக்கு திரையிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டு இருந்தது. டிக்கெட்டுகள் ஆன்லைனில் திறக்கப்பட்டதும் ஒட்டுமொத்த டிக்கெட்களும் விற்பனையானதாக திரையரங்க நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் டிக்கெட்கள் அனைத்தும், தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவருமான மதியழகன் தலைமையில், ஆன்லைன் மூலம் பெறப்பட்டு, ரூபாய் 500 வரை பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆன்லைன் மூலம் விநியோகிக்கப்பட்ட டிக்கெட்கள் அனைத்திலும் விலை ஏதும் குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்து நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளர், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலுக்கு உரிய ஆதாரத்துடன் வாட்ஸப் மூலம் அனுப்பியும், தொலைபேசி எண்ணுக்கு அழைத்தும் நிருபரின் அழைப்பை மாவட்ட ஆட்சியர் ஏற்கவில்லை.

விஜய் தான் பதிலளிக்க வேண்டும்: இதுதொடர்பாக கரூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முல்லையரசு ஈ டிவி பாரத் செய்தியாளரிடம் பேசுகையில், "சாமானிய மக்கள் பார்க்கக்கூடிய திரைப்பட டிக்கெட் தொகையான ரூ.130 தொகையை ரூ.300 முதல் 500 வரை விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் விற்பனை செய்யும் அவல நிலை கரூரில் நடைபெற்று வருகிறது. தியேட்டர் உரிமையாளர்களிடமிருந்து மொத்தமாக ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெற்று, இதுபோன்று விற்பனை செய்வதால் சாமானிய மக்கள் திரையரங்குக்குள் நுழைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய் புதிதாக கட்சி துவங்கி உள்ளார். இந்நிலையில், அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களை சட்டவிரோதமாக தனது பட டிக்கெட்டுகளை விற்பனை செய்ய வைத்திருப்பது, அதிர்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்து வருவாய் ஈட்டுவது, ஊழலில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பதற்கு சமமாகும். இளைஞர்களை ஊழல் செய்ய ஊக்குவிப்பது சரிதானா என்ற கேள்விக்கு நடிகர் விஜய் பதிலளிக்க வேண்டும்.

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள கோட் திரைப்பட டிக்கெட் முறைகேடு குறித்து கரூர் மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு அரசு நிர்ணயித்த விலையில் டிக்கெட் ரசிகர்களுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று முல்லையரசு கோரிக்கை விடுத்தார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளும், விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் இணைந்து, சட்டவிரோத கோட் பட டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டிருப்பது ஆதாரத்துடன் கிடைத்துள்ளது. அரசின் நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

'கோட்' பட டிக்கெட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து த.வெ.க. மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்தால் அதனை வெளியிட ஈடிவி பாரத் தயாராக உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 'கோட்' படம் பார்க்க வெளிநாடுகளில் இருந்து வந்த ரசிகர்கள்; ரோகிணி திரையரங்கில் களைகட்டிய கொண்டாட்டம்! - GOAT rohini theatre celebration

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.