ETV Bharat / entertainment

நவம்பர் 1 முதல் புதிய படப்பிடிப்புகள் நடக்காது; தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!

நவம்பா் 1ஆம் தேதி முதல் புதிய திரைப்பட படப்பிடிப்பை தொடங்க வேண்டாம் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மீண்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2024, 1:54 PM IST

சென்னை: தமிழ்த் திரைப்பட துறையை மறுசீரமைப்பு செய்ய, வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் புதுப் படங்களின் படப்பிடிப்பு நடக்காது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் பெப்சி அமைப்புக்கள் ஆட்சேபனை தெரிவித்து இருந்தன.

இதனையடுத்து, அனைத்து தரப்பினருடனும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, வருகிற நவம்பர் 1ஆம் தேதி முதல் புதுப் படங்களின் படப்பிடிப்பு நடத்த வேண்டாம் என தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் தயாரிப்பு செலவு அதிகரித்து, தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் பணச் சுமை ஏற்படுவதால், திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறுசீரமைப்பு ஏற்படுத்துவதற்கு ஏதுவாக, தயாரிப்பில் இருக்கும் படங்களின் படப்பிடிப்பு மட்டும் நடத்தப்பட வேண்டும். நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் புதிய படங்களை துவக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தோம்.

இதையும் படிங்க: விளையாட்டுத் திடல்கள் தனியாருக்கு டெண்டர் விட்டால் என்னவாகும்? மாமன்ற உறுப்பினர்கள் கூறுவது என்ன?

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் 24 சங்கங்களை உள்ளடக்கிய பெப்சியில், பல யூனியன்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக வந்துள்ளது. இன்னும் சில யூனியன்களிடம் பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. அதை முழுமையாக பேச்சுவார்த்தை நடத்திட வேண்டியுள்ளது.

இவை அனைத்தும் முழுமையாக பேசி நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மறு அறிவிப்பு வரும் வரை புதிய படங்களின் வேலைகளை துவக்க வேண்டாம் என்ற நிலைப்பாடு தொடர்கிறது என்பதை தயாரிப்பாளர்களர்களுக்கு தெரியப்படுத்தி கொள்கிறோம்'' எனக் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.