ETV Bharat / entertainment

பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் யார்? - பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று வெளியாகிறது அறிவிப்பு! - Biggboss season 8 - BIGGBOSS SEASON 8

Biggboss season 8: பிக்பாஸ் சீசன் 8 குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், தொகுப்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, சிம்பு, நயன்தாரா
விஜய் சேதுபதி, சிம்பு, நயன்தாரா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 4, 2024, 3:55 PM IST

சென்னை: விஜய் டிவியில் கடந்த 7 சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். பிரபலங்கள் ஒரே வீட்டில் செல்போன், டிவி என எந்த வித தொழில்நுட்பம் மற்றும் வெளியுலக தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் இருக்க வேண்டும். பிக்பாஸ் வீட்டில் அனைத்து பகுதிகளிலும், கேமரா பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு வார முடிவிலும் மக்கள் ஓட்டெடுப்பின் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்படுவார்.

நடிகர்கள் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைய வேண்டும் என இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவிப்பதுண்டு. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் கடந்த 7 வருடங்களாக தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் தான் நடித்து வரும் திரைப்படங்களின் படப்பிடிப்பு உள்ளதால் இந்த பிக்பாஸ் சீசனில் இருந்து விலகுவதாக கலம்ஹாசன் அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த பிக்பாஸ் சீசனை தொகுத்து வழங்கப் போகும் நட்சத்திரம் யார் என மகக்ளிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

விஜய் சேதுபதி, நயன்தாரா, சிலம்பரசன் என பல நடிகர்களின் பெயர்கள் இந்த லிஸ்டில் அடிபடுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8 குறித்த அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு போஸ்டரை விஜய் தொலைக்காட்சி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் இந்த பிக்பாஸ் சீசன் 8இல் பங்கேற்கப் போகும் போட்டியாளர்கள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகையும், குக் வித் கோமாளி புகழ் சோயா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பாலு மகேந்திரா அன்று கூறியது.. வெற்றிமாறனின் திருப்புமுனையும், திகட்டாத திரைப்படங்களும்! - vetrimaaran birthday

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.