ETV Bharat / entertainment

தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு முன்னுரிமை.. வெளியான முக்கிய தகவல்! - தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி

Tamilaga Vettri Kazhagam: தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கையின் போது மாவட்டப் பொறுப்பாளர்கள் குழுவிலோ அல்லது சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் குழுவிலோ கட்டாயம் ஒரு பெண் நிர்வாகி இடம் பெற வேண்டும் எனத விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு முன்னுரிமை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 7:29 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணியை முதற்கட்ட நடவடிக்கையாக அக்கட்சி கையில் எடுத்துள்ள நிலையில், இதற்காக ஒரு சிறப்பு செயலியையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

அதிகபட்சமாக உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று அறிமுகமாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியலையும் விரைவில் வெளியிட உள்ளதாகவும், அவர்கள் மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணியுடன் சேர்ந்து, உறுப்பினர் சேர்க்கை பணியினை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், ஏற்கனவே உள்ள பொறுப்பாளர்களுக்கு கீழ்தான் புதிய உறுப்பினர்களுக்கு பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய உறுப்பினர் சேர்க்கையின்போது, மாவட்டப் பொறுப்பாளர்கள் குழுவிலோ அல்லது சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் குழுவிலோ கட்டாயம் ஒரு பெண் நிர்வாகி இடம் பெற வேண்டும் என கட்சித் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏற்கனவே மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை குழுவிலும், மகளிர் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்ற செய்தி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் பல்வேறு செயல்பாடுகளில்.

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் (GOAT) படத்தில் நடித்து வருகிறார். இதனைதொடர்ந்து விஜய், கார்த்திக் சுப்புராஜ் அல்லது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் காலிப் பணியிடங்களை எப்போது நிரப்பப்படும்? - மேயர் பிரியா பதில்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.