ETV Bharat / entertainment

சர்வதேச அளவில் கவனத்தை பெற்ற சூரியின் கொட்டுக்காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Kottukkaali released on aug 23 - KOTTUKKAALI RELEASED ON AUG 23

Kottukkaali: இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் வரும் ஆக.23ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கொட்டுக்காளி போஸ்டர்கள்
கொட்டுக்காளி போஸ்டர்கள் (Credits - SKProdOffl X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 5:50 PM IST

சென்னை: கூழாங்கல் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி நடித்துள்ள புதிய திரைப்படம் கொட்டுக்காளி. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இதில் சூரிக்கு ஜோடியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ளார்.

இதில் புகைப்பட இயக்குநராக சக்திவேல், எடிட்டராக கனேஷ் சிவா, நிர்வாக தயாரிப்பாளராக பானு பிரியாவும் பணியாற்றி உள்ளனர். இப்படம் ரிலீஸ்-க்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றது.

அந்த வகையில், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் கொட்டுக்காளி படம் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அந்த வகையில், கொட்டுக்காளி படம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை க்ளிம்ஸ் மூலமாக படக்குழு அறிவித்துள்ளது. கொட்டுக்காளி படமானது வரும் ஆக.23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சூரி துரை செந்தில் குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி பரவலான வெற்றியைப் பெற்றது. சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (CREDITS - ETV BHARAT TAMIL NADU)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: நயன்தாராவுடன் ஜோடி சேரும் கவின்?... சஸ்பென்ஸ் காக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்! - kavin nayanthara

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.