ஹைதராபாத்: சுவிட்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் ஆண்டுதோறும் 'லோகார்னோ திரைப்பட விழா’ நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் 77வது திரைப்பட விழா (77th Locarno Film Festival) வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த ஆண்டு திரைப்பட விழாவின் மிக உயரிய விருதான 'Pardo alla Carriera Ascona-Locarno' எனும் வாழ்நாள் சாதனையாளர் விருது நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விருதை பெறும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை ஷாருக்கான் பெறுகிறார்.
முன்னதாக, இத்தாலி இயக்குநர் பிரான்செஸ்கோ ரோசி, அமெரிக்க பாடகர்-நடிகர் ஹாரி பெலாஃபோன்டே மற்றும் மலேசிய இயக்குநர் சாய் மிங்-லியாங் ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர். இந்த விருது வழங்கும் விழாவில், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான 'தேவதாஸ்' திரைப்படம் திரையிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஷாருக்கான் உடனான ரசிகர்களின் கேள்வி - பதில் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.
இதையும் படிங்க : நாளை இரண்டாம் கட்ட விஜய் கல்வி விருது வழங்கும் விழா! - TVK VIJAY EDUCATION AWARD 2024