சென்னை : இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்த வாழை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளி படிக்கும் சிறுவர்கள் வாழைத்தார் சுமக்கும் வேலைக்குச் செல்கின்றனர்.
அங்கு, முதலாளியால் சிறுவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பது தான் இப்படத்தின் மையக்கதையாகும். இப்படம் வெளியானது முதல் தற்போது வரை சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இப்படத்தை நடிகர் ரஜினி பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுடைய வாழை படம் பார்த்தேன். ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு. மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார்.
அன்று பழைய தகரபெட்டிக்குள் உங்கள் புகைப்படங்களை தேடி தேடி சேகரித்து வைத்த அந்த சிறுவனின் கனவுக்குள்ளிருந்து அவனின் பிஞ்சு விரல்களை கொண்டே எழுதி சொல்கிறேன் . உங்கள் வாழ்த்திற்கும் அரவணைப்புக்கும் நன்றிகள் எங்கள் சூப்பர் ஸடார் அவர்களே ✡️🤩 @rajinikanth sir ❤️❤️#vaazhai pic.twitter.com/14itPp3zcR
— Mari Selvaraj (@mari_selvaraj) September 2, 2024
அதில், அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.
மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குநர் என்பதை இந்த படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார். மாரி செல்வராஜ்க்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்" என்று ரஜினி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : நடிகைகளின் பாலியல் பிரச்னைகளுக்கு யார் பொறுப்பு? - பிரபல நடிகை கைக்காட்டுவது இவர்களைதான்! - radhika about hema committee