சென்னை: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று (மார்ச் 3) ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அம்பானியின் நெருங்கிய நண்பரான அமிதாப் பச்சன் குடும்பம் இன்னும் வரவில்லை என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இன்று அமிதாப் பச்சன், ஸ்வாதா, நந்தா மற்றும் பேரன் அகஸ்தியா நந்தா ஆகியோர் ஜாம் நகர் வந்தனர்.
மேலும், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் ஆராதாயா ஆகியோர் கலினா என்ற தனியார் விமானத்தில் ஜாம் நகர் வந்தடைந்தனர். மேலும், ரஜினிகாந்த் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருடன் ஜாம் நகருக்கு வருகை புரிந்தார். இருபெரும் சூப்பர் ஸ்டார்கள் வருகை புரிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
முன்னதாக, பேஸ்புக் தலைமை செயலதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், தனது மனைவி பிரிசில்லா சானுடன் கலந்து கொண்டார். மேலும், இந்நிகழ்ச்சியில் பிரபல பாப் பாடகி ரிஹானாவின் கான்சர்ட் நிகழ்வு நடைபெற்றது. ஆட்டம் பாட்டத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கான் தனது மனைவி கவுரி கானுடன் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தார்.
மேலும், பாலிவுட் நடிகர்களான சல்மான் கான், அமீர் கான், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர். அதேபோல், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்ஷியுடன் விழாவில் கலந்து கொண்டார்.
சினிமா நட்சத்திரங்களான ரன்வீர் சிங் - தீபிகா படுகோன், ஸ்ரேயா கோஷல், ஷியாமக் தவார், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, சைஃப் அலி கான், கரீனா கபூர் கான், வருண் தவான், அனில் கபூர், ஆலியா பட், சாரா அலி கான், இப்ராகிம் அலி கான், அனன்யா பாண்டே மற்றும் ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்டோர் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரைப் பாராட்டி வீடியோ வெளியிட்ட நடிகர் கமல்ஹாசன்!