ETV Bharat / entertainment

மீண்டும் உளவாளியாக மிரட்ட வரும் கார்த்தி... ’சர்தார் 2’ படப்பிடிப்பு தொடக்கம்! - sardar 2 shooting started - SARDAR 2 SHOOTING STARTED

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, எஸ்.ஜே சூர்யா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'சர்தார் 2' படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

சர்தார் 2 படப்பிடிப்பு தொடக்கம்
சர்தார் 2 படப்பிடிப்பு தொடக்கம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 24, 2024, 2:18 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான படம் 'சர்தார்'. இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். சர்தார் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் பேனரின் கீழ் எஸ்.லட்சுமண் குமார் தயாரித்தார்.

மேலும், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்திற்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தார். இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து, நடிகை ராஷி கன்னா, லைலா, இந்தி திரைப்பட நடிகர் சங்கி பாண்டே, ரித்விக், யூகி சேது, அவினாஷ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில், நல்ல ஆக்‌ஷன் திரைப்படமாக பெரும் வரவேற்பைப் பெற்று, விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்தது மட்டுமல்லாமல், 2022ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாகவும் இடம் பெற்றது. இந்நிலையில், சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

சமீபத்தில் 'சர்தார் 2' படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் கார்த்தி உடன் எஸ்.ஜே சூர்யா, மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். 'சர்தார் 2' படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கியுள்ளது. இதற்காக மாளவிகா மோகனன் சென்னை வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

சென்னையில் உள்ள படப்பிடிப்புத் தளத்தில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 3ஆம் தேதி வரை இங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 5ஆம் தேதி தலக்கோணத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற 'சர்தார் 2' படப்பிடிப்பிற்கான ஒத்திகையில் விபத்து ஏற்பட்டு சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "வாழை படத்தில் அருமையான நடிப்பு"... ’குக் வித் கோமாளி’ புகழ் நடிகை திவ்யா துரைசாமியை பாராட்டிய மிஷ்கின்! - mysskin praised divya duraisamy

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.