ETV Bharat / entertainment

தஞ்சாவூர் மண் வாசனையில் ஒரு ஃபீல் குட் திரைப்படம்... 'மெய்யழகன்' டிரெய்லர் வெளியீடு! - Meiyazhagan trailer - MEIYAZHAGAN TRAILER

Meiyazhagan trailer: பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்துள்ள ‘மெய்யழகன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது.

மெய்யழகன் டிரெய்லர் போஸ்டர்
மெய்யழகன் டிரெய்லர் போஸ்டர் (Credits - @2D_ENTPVTLTD X Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 23, 2024, 12:22 PM IST

சென்னை: சூர்யா, ஜோதிகா 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘மெய்யழகன்’ திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தஞ்சாவூர் மண் வாசனையில், உறவுகளின் முக்கியத்துவத்தை கொண்டு, பிரேம் குமார் எழுதிய புத்தகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தின் வாயிலாகப் பிரபலமடைந்த இயக்குநர் பிரேம் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த சூழலில் 'மெய்யழகன்' படத்தின் டீசரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

மேலும், இப்படத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி ஆகியோரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் 'மெய்யழகன்' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (செப்டம்பர் 23) வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வரும் அரவிந்த் சாமி, அங்கு அவர் சந்திக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகள், அங்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து டிரெய்லரில் கூறப்பட்டுள்ளது. மேலும் டிரெய்லரில் தஞ்சாவூரில் உள்ள பிரபல உணவுகளை சம்பந்தமாக கார்த்தி பேசுகிறார்.

இதையும் படிங்க: 19 வயதில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற ரியா சிங்கா; நடுவராக பங்கேற்ற ’லெஜண்ட்’ பட நடிகை! - Rhea Singha Miss Universe India

மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கார்த்தி, தான் தொடர்ச்சியாக ஆக்‌ஷன் படங்களில் நடித்து வருவதாகவும், இது போன்ற உறவுகளை கொண்டாடும் படத்தில் நடிக்க விரும்பியதாகவும் கூறினார். மேலும் சூர்யா மெய்யழகன் படத்தை பார்த்த பின் தன்னை கட்டியனைத்து பாராட்டியதாகவும் தெரிவித்தார்.

மெய்யழகன் படத்தின் புரமோஷன்களில் படக்குழு ஆரம்பம் முதல் வித்தியாசம் காட்டி வருகிறது. படத்தின் ரிலீஸ் போஸ்டரில் புரட்டாசி 11 என்ற தேதி இடம் பெற்றது. மேலும், டீசர் என்பதற்கு கிளர்வோட்டம் என்ற பெயர் இடம்பெற்றது.தற்போது டிரெய்லருக்கு முன்னோட்டம் என்ற பெயரில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.