ஹைதராபாத்: கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 152 பேர் காணவில்லை. இந்த நிலச்சரிவில் அதிகளவில் பாதிக்கப்பட்ட சூரல்மலை, வெளரிமலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் மீட்பு பணிகள் இன்றும் நடைபெற்று வருகிறது. இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, நடிகர் மோகன்லால் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை அளிக்குமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து திரைத்துறை கலைஞர்கள் பலர் நிதியளித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் 20 லட்சம் வழங்கினார். இதனைத்தொடர்ந்து நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி இணைந்து 50 லட்சம் வழங்கினர். அதேபோல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து 20 லட்சமும், நடிகர்கள் சிரஞ்சீவி, ராம் சரண் இணைந்து 1 கோடி ரூபாயும், நடிகர் அல்லு அர்ஜூன் 50 லட்ச ரூபாயும், நடிகை ராஷ்மிகா மந்தனா 10 லட்ச ரூபாயும் வழங்கியுள்ளனர். இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பிரபல நடிகர் பிரபாஸ் 2 கோடி வழங்கியுள்ளார்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-08-2024/22146859_watsapp.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "கனத்த இதயத்துடன் எடுத்த முடிவு".. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல்ஹாசன்...அடுத்த தொகுப்பாளர் யார்? - Kamal Haasan