டெல்லி: ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளியில் கடந்த 1940ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதியன்று பிறந்தவர் யாமினி கிருஷ்ணமூர்த்தி (84). பரதநாட்டியத்தில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்த இவருக்கு, மத்திய அரசு பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருது வழங்கி கெளரவித்தது. இந்நிலையில், இவர் கடந்த ஆறு மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்று இருந்து வந்தார்.
இந்நிலையில், டாக்டர் யாமினி கிருஷ்ண மூர்த்தி இன்று (ஆக.3) மதியம் உடல்நலக் குறைவால் காலமானார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டாக்டர் சுனில் மோடி தலைமையிலான மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். மருத்துவக் குழு தங்களால் முயன்றதை செய்தனர். ஆனால், இன்று மதியம் அவர் உயிரிழந்துவிட்டார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவரின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: 150க்கும் மேலான கேள்விகள்.. இரண்டரை மணி நேர விசாரணை.. விஷாலிடம் குறுக்கு விசாரணை நிறைவு! - vishal case