ETV Bharat / entertainment

இயக்குநர் பாரதிராஜா நடிக்கும் 'நிறம் மாறும் உலகில்' திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியது! - Niram Marum Ulagil First look - NIRAM MARUM ULAGIL FIRST LOOK

Niram Marum Ulagil: அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB இயக்கத்தில், இயக்குநர் பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் 'நிறம் மாறும் உலகில்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Niram Marum Ulagil
Niram Marum Ulagil
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 8:57 PM IST

சென்னை: அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB இயக்கத்தில், இயக்குநர் பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் 'நிறம் மாறும் உலகில்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை Signature Productionz மற்றும் GS Cinema International இணைந்து தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், லைகா நிறுவன நிர்வாக இயக்குநர் GKM தமிழ் குமரன், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த படம் நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தையும், உணர்வுகளைப் பேசும் அழகான கமர்ஷியல் படமாக உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது இரத்தம் பாயும் கரும் சிவப்பு நிறப் பின்னணியில், துப்பாக்கி, ஆட்டோ, கண்ணாடி, ஒரு பெண்ணின் நிழல் முகம், எனக் குறியீடுகளுடன் வெளியாகி உள்ளது.

பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி என ஒவ்வொருவரின் லுக்கும் இதுவரையிலும் பார்த்திராத வகையிலான தோற்றத்தில் உள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். தற்போது இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், ரிஷிகாந்த், கனிஹா, ஆதிரா, காவ்யா அறிவுமணி, துளசி, அய்ரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சரவதி, ஹரிநிரமேஷ்கிருஷ்ணன், விஜித், ஜீவா சினேகா, திண்டுக்கல் சரவணன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதைகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கலர் டோனில் படமாக்கப்பட்டுள்ளதாகவும், முற்றிலும் புதிதான அழகான அனுபவம் தரும் படைப்பாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனக் கூறப்படும் நிலையில், படத்தின் டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: த்ரிஷா ரியாக்‌ஷன் முதல் பிரதீப் ரங்கநாதனின் ஃபேன் பாய் மொமெண்ட் வரை.. கில்லி ரீரிலீஸ் கொண்டாட்டம்! - Ghilli Re Release

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.