ETV Bharat / entertainment

"என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும்" - யுவன் சங்கர் ராஜா! - yuvan adviced school students

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 25, 2024, 8:35 PM IST

Updated : Aug 25, 2024, 10:23 PM IST

Yuvan Shankar Raja: யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் நடைபெற்ற பள்ளிவிழா ஒன்றில், மாணவர்களிடம் எங்கு தவறு நடந்தது என்று தான் யோசிக்க வேண்டும், பேசுகிற வாய் பேசிக்கொண்டே தான் இருக்கும், எதற்கும் செவி சாய்க்கக் கூடாது. என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும் என அறிவுரை வழங்கினார்.

யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா (Credits - ETV Bharat Tamil Nadu, yuvan X Page)

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இவர் சினிமாத் துறையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும், தனிப் பாதையையும் உருவாக்கியவர். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி உள்ள தி கோட் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட யுவன் சங்கர் ராஜா மாணவர்கள் மத்தியில் 'இருட்டினிலே நீ நடக்கையிலே'.. என்ற பாடலை பாடி, மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவ்விழாவில் பேசினார். அப்போது பேசிய அவர், "இங்கு 'தோல்வியில் இருந்து வெற்றி' அதைப் பற்றி தான் பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆரம்பத்தில் நான் இசைமயைத்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் நான் இசையமைக்கும் படங்கள் எல்லாமே தோல்வியடையும் என்று முத்திரை பதித்தனர். அதன்பிறகு நான் தனி அறையில் அமர்ந்து, கதவை பூட்டிக் கொண்டு அழுது கொண்டிருப்பேன்.

எங்கு தவறு நடந்தது என்று யோசிப்பேன். சில நாட்கள் கழிந்தன. பிறகு மீண்டும் இசையமைக்கத் துவங்கினேன். இப்படி தான் இங்கு உங்கள் முன் நிற்கிறேன். இதில் உள்ள யோசனை என்னவென்றால், பேசுகிற வாய் பேசிக் கொண்டே தான் இருக்கும். நாம் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.

எதையும் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது. எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும். ஆனால் நீங்கள் அவை எதற்கும் செவி சாய்க்கக் கூடாது. உங்கள் தலை நிமிர்ந்த படி எல்லாவற்றையும் கடந்து வர வேண்டும்.

இதனால் தான் என்னால் இத்தனை ஆண்டுகள் இந்த துறையில் நீடித்து நிற்க முடிகிறது. எனக்கு வரும் கருத்துக்கள், பேச்சுகள் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்தால், இத்தனை ஆண்டுகள் பயணித்திருக்க முடியாது. என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும். நல்ல இசை மற்றும் பாசிட்டிவிட்டிக்கு மட்டுமே என் காதுகள் திறந்திருக்கும். உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : அன்றே கணித்த உதயநிதி ஸ்டாலின்.. மாரி செல்வராஜ் சொன்ன சுவாரஸ்யம்! - Mari Selvaraj about Udhayanidhi

Last Updated : Aug 25, 2024, 10:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.