ETV Bharat / entertainment

கைகளைப் பற்றிய பாலா என்னிடம் கூறியது என்ன? மாரி செல்வராஜ் அதிர்ச்சி பதில்! - Mari selvaraj about director bala

Mari selvaraj about director bala: இயக்குநர் பாலா வாழை படம் பார்த்த பின் மாரி செல்வராஜை முத்தமிட்டு பாராட்டிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், வாழை படம் பார்த்த பிறகு பாலவும் நானும் எதுவும் பேசவில்லை என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் புகைப்படம்
மாரி செல்வராஜ் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 23, 2024, 7:14 PM IST

Updated : Aug 23, 2024, 7:56 PM IST

திருநெல்வேலி: வாழை திரைப்படத்தை நெல்லை ராம் திரையரங்கில் ரசிகர்கள் மற்றும் ஊர் மக்களுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் முதல் நாள், முதல் காட்சியைக் கண்டுகளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாரி செல்வராஜ், “வாழை திரைப்படத்திற்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வாழை திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரைகளை அதிகரிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மாரி செல்வராஜ் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

நல்ல நோக்கங்களும், நல்ல மனிதர்களின் கதைகளும், எளியோர்களின் வலியும் என்றும் தோற்காது. காலம் கடந்தாலும் என்றாவது ஒருநாள் வெற்றியைப் பெற்றே தீரும் என்பதற்கு வாழை திரைப்படம் ஒரு உதாரணம். நெருக்கமான மனிதர்களிடம் மட்டுமே நான் தனிமையை உணர்ந்த போது நான் சொல்லிய கதை இது, எனது வாழ்க்கை இதுதான். இங்கிருந்து தான் நான் புறப்பட்டு வந்தேன் என பலரிடம் சொல்லி இருந்தேன். நிலையான ஒரு இடத்தைப் பிடித்த பிறகு இந்த படத்தை எடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன்.

அது அனைத்தையும் பொதுமக்கள் தவிடிபொடியாக்கி, நினைத்ததை விட கூடுதல் வெற்றியை தந்துள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் நடைபெற்ற வன்கொடுமைச் சம்பவத்தை எடுத்துப் பார்க்க வேண்டும். ஏதோ சொல்வதற்கு சொல்ல வேண்டும் என்பதைப் போல் இயக்குநர்களை குறை சொல்லக்கூடாது.

வன்கொடுமைச் சம்பவங்கள் ஆண்டாண்டு காலமாக நடந்து தான் வருகிறது. உண்மையைத் தழுவி படம் எடுக்கும் போது கேள்வி கேட்க வேண்டும் என கேட்கப்படுகிறது. ஒரு திரைப்படத்தை வரைமுறைப்படுத்தி தான் எடுக்க வேண்டும் என்ற முறை கிடையாது. யாருக்கு எது போன்ற காட்சிகள் திரைப்படத்தில் வைக்கத் தோன்றுகிறதோ, அதேபோன்ற காட்சிகளை அவர்கள் வைத்து திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கதையில் உண்மை இருந்தால் அது மக்களைச் சென்றடையும். இயக்குநருக்கும், கதைக்கும் நேரடித் தொடர்பு உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து திரைப்படம் எடுத்து வருகிறேன்.

துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் திரைப்படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. தனுஷுடன் அடுத்து ஒரு திரைப்படம் எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நெல்லை மக்களிடத்தில் ஆழமாகவும், உளவியல் ரீதியாகவும் பல மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது. கலை வடிவத்திலேயே அதனை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் அந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். மண்ணின் மைந்தர்களுக்கு கலை வடிவத்தில் திருப்பிக் கொடுக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

மண்ணின் மைந்தர்கள் இந்த திரைப்படத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணி செய்துள்ளனர். கலைக்கு நெருக்கமாக உள்ள மக்களை இன்னும் பலமாக்க வேண்டியது என் கடமை. இயக்குநர் பாலா வாழை திரைப்படத்தைப் பார்த்த போது நடந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் உள்ளது மட்டும் தான். இந்த படத்தைப் பார்த்து அவரும் எதுவும் பேசவில்லை, நானும் இதுவரை அவரிடம் எதுவும் பேசவில்லை” என கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ரூ.120 கோடியில் சொகுசு விமானம் வாங்கினாரா சூர்யா? Dassault Falcon 2000LSX விமானத்தில் உள்ள வசதிகள் என்ன? - Suriya private Jet

Last Updated : Aug 23, 2024, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.