சென்னை: தமிழ் சினிமாவில் சமூக நீதி பேசும் திரைப்படங்கள் மூலம் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் ஏற்கெனவே 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்' உள்ளிட்ட சமூகநீதி பேசும் திரைப்படங்களை இயக்கி உள்ளார். இப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது இவர் ’வாழை’ என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். கலையரசன் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில், நிகிலா விமல், பிரியங்கா நாயர் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேனி ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் மாரி செல்வராஜ் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும்.
காக்கா கத கேக்கும்போது யானை மூஞ்சு தெரியுது
— Mari Selvaraj (@mari_selvaraj) July 29, 2024
யானைக் கத கேக்கும்போது பூனை சத்தம் கேக்குது
பூனைக் கத கேக்கும்போது தெருநாய் கொறைக்குது ✨#Vaazhai#OruOorulaRaja Out Now!! 🌸 https://t.co/tKODecheyT @disneyplusHSTam@RedGiantMovies_ @thinkmusicindia @Fmpp_Films @Music_Santhosh pic.twitter.com/AAmJXhjoq9
சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'தென்கிழக்கு' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. மேலும், இப்பாடலானது யூடியூப்பில் 28 லட்சம் பார்வையாளர்களை கடந்தது. இந்நிலையில், இன்று இரண்டாவது பாடலான ’ஒரு ஊர்ல ராஜா’ என்கின்ற பாடல் வெளியாகி உள்ளது. பாடல் வரிகளை மாரி செல்வராஜ் எழுதி உள்ளார். பாடலை சந்தோஷ் நாராயணன் பாடி உள்ளார். படமானது வருகின்ற ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்