ETV Bharat / entertainment

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் இணைந்த மஞ்சும்மல் பாய்ஸ் ஹீரோ.. யார் தெரியுமா? - Actor sreenath bhasi

Actor G.V.Prakash New Film: இயக்குநர் அகிரன் மோசஸ் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாஸி இணைந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

Actor G.V.Prakash New Film
Actor G.V.Prakash New Film
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 6:12 PM IST

Updated : Mar 11, 2024, 8:08 PM IST

சென்னை: இயக்குநர் அகிரன் மோசஸ் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஷிவானி ராஜசேகர், பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாஸி இந்த படத்தில் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இப் படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.

படத்திற்கு ஒளிப்பதிவாளராக ரூபேஷ் சாஜி, படத்தொகுப்பாளராகச் செல்வா RK, கலை இயக்குநராக ரகு, சண்டைப்பயிற்சியாளராக ஸ்டன்னர் சாம், ஆடை வடிவமைப்பாளராக சபீர் ஆகியோர் படத்தில் இணைந்துள்ளனர்.

நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்புகள்: நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'ப்ளூ ஸ்டார்'. இந்த படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. அதுமட்டுமின்றி அட்டகத்தி தினேஷ் மற்றும் ஊர்வசி நடித்த 'ஜே பேபி' திரைப்படத்தையும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

மஞ்சும்மல் பாய்ஸ்: சமீபத்தில், மலையாளத்தில் வெளியாகி ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்த படம் தான் 'மஞ்சும்மல் பாய்ஸ்' கொடைக்கானலில் உள்ள குணா குகையில் சிக்கிக் கொண்ட நண்பரை மீட்கப் போராடும் நண்பர்களின் கதைதான் 'மஞ்சும்மல் பாய்ஸ்'.

கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவின் மஞ்சும்மல் பகுதியிலிருந்து கொடைக்கானல் பகுதிக்குச் சுற்றுலா சென்ற நண்பர்கள் குழு, அங்குள்ள அனைத்துச் சுற்றுலாத் தலங்களையும் பார்த்துவிட்டு குணா குகைக்குச் சென்றுள்ளனர்.‌

அப்போது இவர்களின் நண்பர்களின் ஒருவரான சுபாஷ் என்பவர், ஆழமான குகைக்குள் சிக்கிக் கொள்கிறார். அங்குச் சிக்கியவர்கள் யாரும் உயிருடன் மீண்டதில்லை. ஆனால், சுபாஷை அவரது நண்பர்கள் எப்படி உயிருடன் காப்பாற்றினார்கள் என்பதே இப்படத்தின் கதை. கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது தான் மஞ்சும்மல் பாய்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Tenet-க்கு கிடைக்காத ஆஸ்கர் Oppenheimer-க்கு கிடைத்தது எப்படி? 3 முறை நோலனை புறந்தள்ளிய ஆஸ்கர்!

Last Updated : Mar 11, 2024, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.