சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அவரது 171வது படத்திற்கு 'கூலி' என தலைப்பிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் எல்சியூவில்(LCU) இடம்பெறாது என லோகேஷ் ஏற்கனவே கூறியுள்ளார்.
'தலைவர் 171' கைதி திரைப்படம் போல ஒருநாள் இரவில் நடக்கும் கதையாக இருக்கும் எனவும், ரஜினிகாந்த் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த படத்தில் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், ரன்வீர் சிங் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
லோகேஷ் விக்ரம் படம் முதல் தனது படத்தின் தலைப்பை டீசர் வீடியோவாக தயாரித்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் ரஜினிகாந்தின் 171வது படமான கூலி டீசர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இந்த டைட்டில் டீசர் வீடியோவில் ரஜினிகாந்த் தங்கக் கடத்தல் கும்பலை அடிப்பது போல காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரன்வீர் சிங்கின் டீப் பேக் வீடியோ வைரல்! சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு! - Ranveer Singh DeepFake Video