ஹைதராபாத்: நடிகரும், ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமா ராவ் (NTR) 101வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு அவரது மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா, பேரன்கள் ஜூனியர் என்டிஆர், கல்யாண் ராம் ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள என்டிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் இன்று என்டிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினர்.
ஜூனியர் என்டிஆர் (Junior NTR) மரியாதை செலுத்திய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. என்டிஆர் என அழைக்கப்படும் நந்தமுரி தாரகா ராமா ராவ் தெலுங்கு சினிமாவில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தெலுங்கு தேசம் கட்சி தொடங்கி, ஆந்திர மாநிலத்திற்கு மூன்று முறை முதலமைச்சராக இருந்துள்ளார். ஜனவரி மாதம் 18ஆம் தேதி 1996இல் என்டிஆர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். என்டிஆர் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா, ஜூனியர் என்டிஆர் தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருகின்றனர்.
பாலிவுட்டில் களமிறங்கவுள்ள ஜூனியர் என்டிஆர் தற்போது ஹிருதிக் ரோஷனுடன் வார் 2 (War 2) படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் கொரட்டலா சிவா இயக்கத்தில் தேவாரா 1,2 என இரண்டு பாகங்களாக நடித்து வருகிறார். இதனைதொடர்ந்து பிரஷாந்த் நீல் இயக்கத்தில் தனது 31வது படத்தில் நடித்து வருகிறார். தேவாரா படத்தின், அனிருத் இசையில் முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியானது.
இதையும் படிங்க: மாயி பட இயக்குநரின் உடல் நல்லடக்கம்..! - Director Surya Prakash