சென்னை: இயக்குநர் அந்தோணி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், சைரன். இப்படம் இன்று (பிப்.16) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
திரைப்படம் தொடர்பாக நேற்று (பிப்.15) இரவு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஜெயம் ரவி, "தமிழ் சினிமாவில் 20 வருடங்கள் முடிந்து 21வது வருடத்தில் பயணித்து வருகிறேன். நல்ல திரைப்படங்கள் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயணித்து வருகிறேன். சைரன் திரைப்படம் அநேக நல்ல கருத்துக்களை உள்ளடக்கிய திரைப்படமாக வந்துள்ளது. சைரன் படத்தின் மூலமாக பாக்கியராஜை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம்" என்றார்.
மேலும், சைரன் திரைப்படத்தில் வயதான தோற்றத்தில் நடித்துள்ளீர்கள், இது பற்றி உங்கள் மனைவியின் கருத்து என்னவாக இருந்தது என்ற கேள்விக்கு, "நான் செய்யும் வேலையில் நம்பிக்கை இருந்தால் கட்டாயம் நல்லதொரு படத்திற்காகத்தான் இப்படி தோற்றத்தை ஏற்றுள்ளார் என என்னை நம்பினார்” என்று கூறினார்.
நடிகர் விஜயின் இடத்தை நிரப்ப ஆக்ஷன் திரைப்படங்களில் நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு,"கோமாளி போன்ற ஒரு கதை பிடித்ததால் அதில் நடிக்கிறேன். அடங்கமறு படத்தில் நடித்துள்ளேன். தற்பொழுது சைரன் போன்ற ஒரு கதை பிடித்துள்ளதால், இதில் நடித்துள்ளேன். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன் தவிர, ஆக்சன் ஹீரோவா? அப்படி வகைப்படுத்த தெரியவில்லை” எனக் கூறினார்.
இதையும் படிங்க: விளைச்சல் இருந்தும் விலை குறைவு... போடி காப்பி கொட்டை விவசாயிகள் வேதனை!