ETV Bharat / entertainment

ஜிவி பிரகாஷ், சைந்தவி திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது... ரசிகர்கள் அதிர்ச்சி! - GV PRAKASH SAINDHAVI - GV PRAKASH SAINDHAVI

GV prakash saindhavi: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சைந்தவி ஜோடி தாங்கள் பிரிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

gv prakash saidhavi file photo
ஜிவி பிரகாஷ் சைந்தவி கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 7:02 AM IST

Updated : May 14, 2024, 7:36 AM IST

சென்னை: ஜிவி பிரகாஷ், சைந்தவி ஜோடி தாங்கள் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் பொல்லாதவன், ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், தெய்வத்திருமகள் என பல ஹிட்டான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் கடந்த 2013ஆம் ஆண்டு இசைக்கலைஞரான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த 2020ஆம் இருவருக்கும் அன்வி என்ற மகள் பிறந்தார். ஜிவி பிரகாஷ் இசையில் சைந்தவி இணைந்து பையா படத்தில் அடடா மழடா, தெறி படத்தில் என் ஜீவன், அசுரன் படத்தில் எள்ளு வய பூக்களையே என பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் தற்போது தங்கலான், வணங்கான், அமரன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வீர தீர சூரன் உள்ளிட்ட படங்கள் வரிசையாக ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த திரைப்படங்களிலும் சைந்தவி சில பாடல்களை பாடி உள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஜிவி பிரகாஷ், சைந்தவி ஜோடி பிரியப்போவதாக இணையத்தில் செய்திகள் உலா வந்த நிலையில், இருவரும் நேற்று தங்களது சமூக வலைதள பக்கத்தில் தாங்கள் பிரியப்போவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜிவி பிரகாஷ், சைந்தவி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாங்கள் பிரிவதாக முடிவு செய்துள்ளோம். 11 ஆண்டுகள் நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம், நன்கு யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளோம். நாங்கள் இருவரும் எங்கள் மன நிம்மதிக்காக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்களது இந்த முடிவை ஊடக நண்பர்கள், ரசிகர்கள் அனைவரும் புரிந்து கொண்டு எங்களுக்கு தனிப்பட்ட நேரத்தை அளிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளனர்.

ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கு இடையேயான பிரச்சனையே இவர்களது பிரிவுக்கு காரணம் என்றும், இருவரின் பெற்றோர் வழியாக ஏற்பட்ட மனக்கசப்பினால் கடந்த 6 மாதங்களாக இருவரும் பிரிந்து தனியாகவே வாழ்ந்து வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு சின்னதிரை இயக்குநர்கள் சங்கத் தேர்தல்.. தலைவராகிறார் மங்கை அரிராஜன்! - Tamil Serial Directors Association

Last Updated : May 14, 2024, 7:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.