ETV Bharat / entertainment

ஜூனியர் என்டிஆரின் 'தேவரா' படத்திற்கு இயக்குநர் ஷங்கர் எதிர்ப்பா?..பின்னணி என்ன? - shankar velpari issue - SHANKAR VELPARI ISSUE

Director Shankar velpari issue: இயக்குநர் ஷங்கர் வேள்பாரி நாவலின் காட்சிகளை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என தனது சமூக வலைதள பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர், தேவரா போஸ்டர்
இயக்குநர் ஷங்கர், தேவரா போஸ்டர் (Credits - ETV Bharat Tamil Nadu, Jr NTR X Page)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 23, 2024, 5:57 PM IST

Updated : Sep 24, 2024, 9:18 AM IST

சென்னை: தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர், ஜென்டில்மேன் தொடங்கி இந்தியன், முதல்வன், சிவாஜி என சமீபத்தில் வெளியான இந்தியன் 2 வரை பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் ஷங்கர் திரைப்படத்தின் கதைக்களம் பெரும்பாலும் ஊழல் ஒழிப்பு பற்றி தான் இருக்கும். மேலும் ஷங்கர் படங்களில் பாடல் காட்சிகள் பிரமாண்டமான முறையில் இருக்கும். இயக்குநர் ஷங்கர் ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார்.

அதே நேரத்தில் ஷங்கரின் சமீபத்திய படமான இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் இயக்குநர் ஷங்கர் மனதளவில் வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' மற்றும் இந்தியன் 3 பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் எழுத்தாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதிய 'நவயுக நாயகன் வேள்பாரி' நாவலின் காப்புரிமையை இயக்குநர் ஷங்கர் பெற்றுள்ளார். அந்த நாவலை படமாக்கும் பணிகளை இயக்குநர் ஷங்கர் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று இயக்குநர் ஷங்கர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சு.வெங்கடேசனின் 'நவயுக நாயகன் வேள்பாரி' நாவலின் காப்புரிமைக்கு சொந்தமானவர் என்ற முறையில் அந்த நாவலில் வரும் சம்பவங்கள் வெவ்வேறு படங்களில் காட்சிகளாக வைக்கப்படுவது வருத்தமளிக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் ஒன்றில் அந்த நாவலின் முக்கிய காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது மிகுந்த வேதனையைத் தருகிறது. இத்தகையை விஷயங்களை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

படைப்பாளிகளின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், அனுமதியின்றி நாவலின் காட்சிகளை படமாக்காதீர்கள். மீறினால் சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும்” என்று பதிவிட்டிருந்தார். இது ஒருபுறம் இருக்க, ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தேவரா'. இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இதில் ஆழ்கடலில் சுறா மினுடன் நடிகர் ஜூனியர் என்டிஆர் சண்டையிடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தேவரா படத்தின் டிரெய்லரை பார்த்த பிறகு தான் ஷங்கர், இது போன்று காப்புரிமை தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். திமிங்கிலத்தின் மீதேறி ஜூனியர் என்டிஆர் வருவது, கடல் ரத்தம் கலந்து செங்கடலாக மாறுவது போன்றவை வேள்பாரி நாவலில் வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 6 தமிழ் திரைப்படங்கள்! - oscars 2025 tamil movies

மேலும் வேள்பாரி நாவலில் வரும் சில காட்சிகள், சூர்யா நடித்துள்ள கங்குவா படத்திலும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி தேவரா டிரெய்லரில் பல காட்சிகள் வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்டிஆரின் தேவரா படத்திற்கு எதிர்ப்பா அல்லது வேறு ஏதாவது படத்தை ஷங்கர் குறிப்பிடுகிறாரா என்பது விரைவில் தெரிய வரும்.

Last Updated : Sep 24, 2024, 9:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.