ETV Bharat / entertainment

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா: 'இந்தியன் தாத்தா நல்லவர்களுக்கு ஹீரா..கெட்டவர்களுக்கு..' - இயக்குனர் சங்கர் - Indian 2 audio launch

Indian 2 audio launch: இந்தியன் தாத்தா நல்லவர்களுக்கு ஹீரோ எனவும், கெட்டவங்களுக்கு கொடூரமான வில்லன் என்று இந்தியன் 2 பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன், சங்கர், சிம்பு புகைப்படம்
கமல்ஹாசன், சங்கர், சிம்பு புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 12:59 PM IST

சென்னை: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள 'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை 6 மணியளவில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

இப்படத்தில் கமலுடன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூலை மாதம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீடு நேற்று நடைபெற்றது. இதில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குனர் சங்கர் பேசியாதவது, “தமிழன் இந்தியாவை ஆளும் நாள் ஏன் வரக்கூடாது? ஆசிய கண்டத்தில் ஒரு பெண்மணியை பிரதமராக்கி பார்த்தவர்கள் நாம். இதையும் செய்து காட்டுவோம். இது என் நாடு. இந்த நாட்டின் ஒற்றுமையை காக்க வேண்டியது நம் கடமை. இந்தியன் தாத்தா நல்லவர்களுக்கு ஹீரோ. கெட்டவங்களுக்கு கொடூரமான வில்லன்” எனக் கூறினார்.

இந்தியனுக்கு மேல படமில்லை! பின்னர் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சங்கர், “கமல் சார் 360 டிகிரி நடிகர் என நான் ஒரு விழாவில் கூறியுள்ளேன். ஆனால், இந்தியன் 2வில் கமல் சார் 361 டிகிரி நடிகராக அப்டேட் ஆகியுள்ளார். இந்தப் படத்தில் 4 நாள்கள் கயிற்றில் தொங்கியபடி அவர் நடித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய நடிகர் சிம்பு, “சிம்பு லேட்டா வந்தாருனு மக்கள் சொல்லுவாங்க. ஆனால், நான் தக் லைஃப் ஷூட்டிங்கில் இருந்து வரேன். கமல் சார் உண்மையான பான் இந்திய நடிகர். இந்தியன்னா ஒற்றுமை. கமல் சார்கூட நடிக்கும்போது என் மூளைல எதுவும் ஓடல, அவரை பாத்துட்டே இருக்கலாம் என்று நினைத்தேன். ஒரே நேரத்தில் இந்தியன் 2, 3 மற்றும் கேம் சேஞ்சர் என மூன்று படங்கள் எடுப்பது சாதாரணம் அல்ல.

கமர்ஷியல் படத்துக்கு ஒரு ஃபார்முலா வேண்டும் என்றால் இந்தியனுக்கு மேலே படம் இல்லை என்று தோன்றுகிறது. இந்தியன் என்ற தலைப்புக்கு சரியானவர் கமல்ஹாசன். அவர் எப்போதே இந்தியன் மூலம் பான் இந்தியா படம் செய்து விட்டார். இந்தியன் என்றால் ஒற்றுமை நாம் ஒற்றுமையாக இருப்பதே பெருமை.

சங்கர் சார் நீங்க உண்மையா க்ரேட். கமல் சாருக்கு தமிழ் எழுத்தில் பிழை இருந்தால் பயங்கர கோபம் வரும். அப்படித்தான் நான் ஒருமுறை தமிழ் எழுத்துப்பிழையில் மாட்டிக் கொண்டேன். அவர் திட்டும் பொழுது நான் மகிழ்ச்சியடைந்தேன்” என்றார்.

இதையும் படிங்க: இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா: 'இந்தியன் என்ற எனது அடையாளத்தை யாராவது பிரிக்க நினைத்தால்..!' - கமல்ஹாசன் - Indian 2 Audio Launch

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.