ETV Bharat / entertainment

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் அவதாரத்தில் அருண் விஜய்.. சென்சாரை கிளியர் செய்து யு/ஏ சான்று பெற்ற 'வணங்கான்' - ரிலீஸ் எப்போது? - vanangaan movie - VANANGAAN MOVIE

Vanangaan movie censored: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படத்திற்கு திரைப்பட தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

வணங்கான் போஸ்டர்
வணங்கான் போஸ்டர் (Credits - Sureshkamatchi X Account)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 1:58 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் அருண் விஜய், தனது விடாமுயற்சி மூலம் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார். இவர் தற்போது இயக்குநர் பாலா இயக்கத்தில், 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வி ஹவுஸ் புரோடக்சன்ஸ் நிறுவனம் மற்றும் பி ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாகவும், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர் வைரமுத்து எழுதி உள்ளார். இப்படத்தின் சண்டைப் பயிற்சியாளராக சிவா பணியாற்றியுள்ள நிலையில், படத்தொகுப்பு பணிகளை சுதர்சன் கையாண்டுள்ளார்.

பாலா படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அவரின் சமீபத்திய படங்கள் வர்மா, விசித்திரன் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் வணங்கான் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, வணங்கான் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான ட்ரெய்லரும் வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் ஜீவி பிரகாஷ் வேலை பளு காரணமாக இப்படத்திற்கு சாம் சி.எஸ் பின்னணி இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலா, அருண் விஜய் கூட்டணி என்பதால் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வணங்கான் திரைப்படத்தில் சூர்யா நடித்து வந்த நிலையில், தற்போது அருண் விஜய் நடிப்பில் படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு திரைப்பட தணிக்கை குழு யு/ஏ (U/A) தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 22 வருடத்தில் 7 தேசிய விருதுகள்.. தனித்துவமான இசையால் சாதனை படைத்த ஏ.ஆர்.ரஹ்மான் - AR Rahman

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.