சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ், இயக்கி நடித்த அவரது 50வது திரைப்படம் 'ராயன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனது பெற்றோரை இழக்கும் தனுஷ், அதற்கு பின் தனது தங்கை, தம்பிகளை வளர்ப்பதும், அதன் பின் சென்னையில் உள்ள ரவுடி கும்பலால் அவரது குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு சமாளிக்கிறார் என்பது ராயன் கதையின் கருவாகும்.
கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி வெளியான ராயன் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ராயன் படத்தில் தனுஷ், துஷாரா விஜயன் ஆகியோரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. அது மட்டுமின்றி, ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையும் பாராட்டைப் பெற்றது. மேலும் ராயன் திரைப்படத்தின் திரைக்கதை ஆஸ்கர் நூலகத்தில் இடம்பெற தேர்வாகியுள்ளது. இப்படத்தில் ‘வாட்டர் பாக்கெட்’, 'அடங்காத அசுரன்', 'ஓ ராயா' ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் ராயன் திரைப்படத்தின் வசூல் உலக அளவில் 150 கோடியை நெருங்கி வருகிறது. பிரபல சினிமா வர்த்தக இணையதளம் சாக்னில்க் (sacnilk) வெளியிட்டுள்ள அறிக்கையின், “ராயன் திரைப்படம் உலக அளவில் 147 கோடி வசூல் செய்துள்ளது. அதேபோல் இந்திய அளவில் 91.40 கோடி வசூல் செய்துள்ளது.
ராயன் திரைப்படம் வெளியாகி 18 நாட்களில் இதுவரை தமிழ்நாட்டில் 72.05 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இந்த வருடம் வெளியான தமிழ் படங்களில் ராயன் அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதேபோல் தனுஷ் இதுவரை நடித்த படங்களில் ராயன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சினிமாவில் 65 ஆண்டுகளை நிறைவு செய்த கமல்ஹாசன்.. டெக்னாலஜியின் நாயகன் கடந்து வந்த பாதை! - 65 years of kamal haasan