சென்னை: பிரபல நடிகரும், இயக்குநருமான தனுஷ் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷ் தனது சொந்த நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் (Wunderbar films) மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும், விஸ்வாசம் படம் மூலம் பிரபலமடைந்த அனிகா சுரேந்திரன், ப்ரியா வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இளைஞர்களின் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் முதல் சிங்கிள் 'golden sparrow' வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகிறது. மேலும், இப்பாடலில் பிரபல நடிகை ப்ரியங்கா மோகன் நடனமாடியுள்ளார்.
தனுஷ், ராஜ் கிரண் நடித்த ‘பவர் பாண்டி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்,து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த ’ராயன்’ கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ராயன் படத்தில் இடம்பெற்ற ’அடங்காத அசுரன்’, ’வாட்டர் பாக்கெட்’ ஆகிய பாடல்கள் தற்போது வரை நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மேலும், கடந்த வாரம் அமேசான் ஓடிடியில் வெளியான ராயன் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, தனுஷ் தனது நான்காவது படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் நித்யா மேனன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் இன்று காலமானதாக தகவல்! - Bijili Ramesh Passed Away