- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ரஜினிகாந்த்தின் 171வது திரைப்படத்திற்கான தலைப்பு (Thalaivar 171 title teaser) அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினிகாந்த் கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளை வசனமாக பேசுவது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதாவது
"அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.
தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு
அப்பாவி என்பார்கள்
தப்பாக நினைக்காதே
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே"
என்ற வசனம் ஒரு பாடலின் வரியாகும் . 1979ம் ஆண்டு வெளியான நினைத்தாலே இனிக்கும், ரஜினிகாந்த், கமல்ஹசன் காம்போவில் எவர் கிரீன் கிளாசிக் காம்போவாக என்றும் நினைவு கூறப்படுகிறது. இந்த படத்தில் வரும் சிவசம்போ எனத் துவங்கும் பாடல், கவியரசு கண்ணதாசனால் எழுதப்பட்டு, எம்.எஸ்.விஸ்வநாதனால் இசையமைக்கப்பட்டது.. என்றென்றும் நினைவு கொள்ளத் தக்க இந்த பாடல் இன்று கூலி (Coolie) திரைப்படத்தால் மீண்டும் டிரெண்ட் ஆகியுள்ளது.