கேன்ஸ் (பிரான்ஸ்): இந்திய நடிகை அனசுயா சென்குப்தா பிரபல கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வென்று சாதனை படைத்துள்ளார். 77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த விருதை வென்றதன் மூலம் கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெறும் முதல் இந்திய நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார். கேன்ஸ் திரைப்பட விழா அதிகாரப்பூர்வ இணையதளம் கடந்த மே 25ஆம் தேதி விருது வென்றவர்களின் பட்டியலை வெளியிட்டது.
இந்த முறை கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்படங்கள் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. அதிலும் 'Shameless' படத்தில் நடிகை அனசுயாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. பல்கேரியா நாட்டை சேர்ந்த இயக்குநர் கொன்ஸ்டாண்டின் போஜனோவ் இயக்கிய 'Shameless' படத்தில் அனசுயா, ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
காவ்கல் அதிகாரியை கொலை செய்து விட்டு டெல்லியில் உள்ள பாலியல் தொழில் செய்யும் இடத்தில் சிக்கிக் கொள்ளும் ரேணுகா, அங்கு தேவிகா என்ற பெண்ணால் ஈர்க்கப்படுகிறார். அதற்கு பின் இருவரும் சந்திக்கும் சவால்கள் பற்றி படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அனசுயாவின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்று இந்திய சினிமாவிற்கு உலக அளவில் பெருமை சேர்த்துள்ளார். Shameless திரைப்படத்தோடு sunflowers were the first ones to know என்ற கன்னட குறும்படமும், bunnyhood ஆகிய படங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் la cinef selection என்ற திரைப்பட தரவரிசையில் முதல் மற்றும் மூன்றாவது இடங்களை பெற்றுள்ளது. டாக்டராக இருந்து இயக்குநரான சிதானந்தா நாயக் இப்படத்தை இயக்கியுள்ளார். மன்சி மகேஸ்வரி bunnyhood படத்தை இயக்கியுள்ளார்.
இதையும் படிங்க: கார்த்தி - அரவிந்த் சாமி காம்போவில் மெய்யழகன் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது! - MEIYAZHAGAN Movie Posters