ETV Bharat / entertainment

“நடிகைகளின் கேரவன்களில் கேமரா”.. நடிகை ராதிகா பகீர் குற்றச்சாட்டு! - Radhika about hema committee - RADHIKA ABOUT HEMA COMMITTEE

Actress Radhika Sarathkumar about Hema committee: ஹேமா கமிட்டி அறிக்கை பேசு பொருளாகியுள்ள நிலையில், கேரளாவில் நடிகைகளின் கேரவன்களில் கேமரா பொருத்தியதை நானே பார்த்து கண்டித்துள்ளேன் என நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.

நடிகை ராதிகா சரத்குமார்
நடிகை ராதிகா சரத்குமார் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2024, 4:11 PM IST

Updated : Aug 31, 2024, 4:24 PM IST

சென்னை: மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக கேரள அரசு வெளியிட்ட ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக் உள்ளிட்ட பலர் மீது மலையாள நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதன் விளைவாக, மலையாள நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் தலைவர், நடிகர் மோகன்லால் உட்பட 17 பேர் ராஜினாமா செய்தனர். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக பல்வேறு திரைத்துறையைச் சேர்ந்த நடிகைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல நடிகை ராதிகா சரத்குமார் சினிமாத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து மலையாளத்தில் உள்ள தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், "சினிமாத்துறையில் பாலியல் பிரச்னை குறித்து மிகவும் தாமதமாக பேசப்படுகிறது" என கூறினார்.

தான் சினிமாத்துறையில் 46 ஆண்டுகளாக இருப்பதைக் குறிப்பிட்ட அவர், தவறான அணுகுமுறைகள் தனக்கும் நேர்ந்தததாகவும், ஆனால் உறுதியாக நோ என்பதை பெண்கள் தான் கூற வேண்டும் என்றார். இந்த விவகாரத்தில் ஒரு ஆண் கூட வாய் திறக்கவில்லை என குற்றம் சாட்டிய அவர், திரைத்துறையில் தன்னை தைரியமான பெண்ணாக தன்னை பலரும் பார்ப்பதால், பல பெண்கள் படப்பிடிப்பு தளங்களில் தன்னிடம் உதவி கேட்டுள்ளனர் என்றார். மலையாளத்தில் மட்டுமின்றி, அனைத்து மொழி திரைத்துறையிலும் இந்த பிரச்னை உள்ளது என ராதிகா சரத்குமார் கூறினார்.

கேரளாவில் நடைபெற்ற சம்பவம் குறித்து கேள்விப்பட்டது உண்டா என கேட்டதற்கு, “நான் ஒரு நாள் இரவில் கேரளாவில் படப்பிடிப்பின் இடைவெளியில், ஒரு சிலர் வீடியோக்களை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தனர். அது என்ன என்று பார்த்த போது, அவர்கள் நடிகைகள் கேரவனில் ரகசிய கேமராவை வைத்து பெண்களை ஆபாசமாக படம்பிடித்து உள்ளனர் என்பது தெரியவந்தது. அதன் பிறகு கேரவனுக்குள் செல்ல பயமாக இருந்தது” என்றார்.

பாலியல் புகார் சுமத்தப்பட்ட நடிகர் திலீப் உடன் ராதிகா நடித்தது குறித்து கேட்டதற்கு, "திலீப் மீது வழக்கு நடைபெற்று வருகிறது குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படவில்லை (Not Convicted) . எனது சினிமாத் துறையில் பல பேர் மீது பல பெரிய வழக்குகள் உள்ளது. சில முதலமைச்சர்கள் மீது இதைவிட பெரிய வழக்குகள் எல்லாம் இருக்கின்றன. அவர்களை நேராக பார்த்துள்ளேன். ஆனாலும் அவர்களுடன் நான் பேசுகிறேன் என குறிப்பிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "யுவன் எப்போதும் Mr.Cool.. அவருக்கு கம்பேக் என்பது கிடையாது" - இயக்குநர் விஷ்ணுவர்தன் பிரத்யேக பகிர்வு! - yuvan shankar raja birthday

Last Updated : Aug 31, 2024, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.