சென்னை: ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கே.இ. ஞானவேல்ராஜா தயாரிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான். தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விக்ரம், மாளவிகா, பார்வதி, சிவக்குமார், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், இயக்குநர்கள் பா. ரஞ்சித், ஏ.எல் விஜய், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம், “இந்த மாதிரி படம் எடுக்க தைரியம் வேண்டும். தங்கலான் எனது வாழ்க்கையில் மிக முக்கியமான படம். இந்த படத்தில் எல்லாருமே முக்கிய கதாபாத்திரம். அதையும் தாண்டி நீங்கள் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷின் இசையை உணருவீர்கள். நாங்கள் உணர்ந்து வலி, வேதனை, கஷ்டத்தை ஜி.வி.பிரகாஷ் அழகான இசையாக கொண்டு வந்துள்ளார்.
Son of Gold, Our #Thangalaan #ChiyaanVikram has made his amazing speech at the Grand Audio Launch Event 💥
— Studio Green (@StudioGreen2) August 5, 2024
Hero Speech ▶️ https://t.co/MNUUNfIhmA
A @gvprakash Musical 🎶#ThangalaanAudioLaunch#ThangalaanFromAug15@Thangalaan @chiyaan @beemji @GnanavelrajaKe #StudioGreen… pic.twitter.com/4FmU7udyh8
அதேபோல் இந்த படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. நடிகர் பசுபதியுடன் நான் நடிக்கும் ஆறாவது படம். இந்த படம் வந்த பிறகு அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும். மாளவிகா, இந்த படத்தில் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்திற்காக மாளவிகா கஷ்டப்பட்டு நடித்துள்ளார். நாங்கள் இந்த படத்தில் சாதாரண வசனம் பேசினால், அவர் கவிதைகள் போன்றதொரு வசனங்கள் பேச வேண்டும் அது கடினம்.
பார்வதியுடன் நிறைய முறை நடிக்க வேண்டும் என விருப்பம் இருந்தது. இந்த படத்தில் அவருடன் சேர்ந்து நடித்தது மிகவும் சந்தோஷம். எனக்கு பையனாக இப்படத்தில் நடித்துள்ள ஹரி (மெட்ராஸ் ஜானி) அற்புதமான நடிகர். இயக்குநர்கள் அவரை பயன்படுத்த வேண்டும் என்றார். இந்த படம் எல்லோருக்கும் பெரிய படமாக அமையும்.
என்னுடைய சேது, பிதாமகன், அந்நியன் என அனைத்து கதாபாத்திரமும் கஷ்டப்பட்டு தான் நடித்தேன். ஆனால் தங்கலானை ஒப்பிடும் போது அந்த கதாபாத்திரங்கள் வெறும் 8 சதவீதம் தான். ஏன் தங்கலான் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று யோசித்தேன். அப்போது தான் இந்த தங்கலான் கதாபாத்திரம் நமக்கு நன்றாக கனெக்ட் ஆகிறது என்று புரிந்தது.
நான் சிறுவயதில் நடிகனாக வேண்டும் என விரும்பினேன். 8வது வரை நன்றாக படித்தேன். அதன் பிறகு நடிக்க வேண்டும் என ஆசையால் சரியாக படிக்கவில்லை, கடைசி 3 ரேங்க் தான் வாங்குவேன். அதிர்ஷ்டவசமாக காலேஜில் ஒரு டிராமாவில் நடித்த போது சிறந்த நடிகர் விருது கிடைத்தது. ஆனால் அன்று என் கால் உடைந்தது. முன்று வருடம் படுக்கையில் இருந்தேன். 23 ஆபரேஷன் நடைபெற்றது. மருத்துவர் நான் நடப்பதே பெரிய விஷயம் என கூறிய போது, என் அம்மா அழுதார்.
ஆனால் நான் நடப்பேன் என்றேன். அப்போது எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது, அதன் பிறகு பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் 10 வருடங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை, ஆனால் போராடினேன். என் நண்பர்கள் உன்னால் நடக்கவே முடியல்லை, எதற்கு நடிப்பு என்றேல்லாம் கூறுவார்கள். ஆனால் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என வேலைக்கு 750 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சென்றேன்.
அப்போதும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என விடாமல் முயற்சி செய்து வெற்றி பெற்றதால் தான், நான் இந்த மேடையில் நிற்கிறேன். ஆனால் நான் அப்போது வெற்றி பெறாமல் இருந்திருந்தால் இப்போதும் சினிமா வாய்ப்பிற்காக முயற்சி செய்து கொண்டு தான் இருந்திருப்பேன். நான் சினிமாவை நேசிக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு அளித்த ரஞ்சித்திற்கு மிகவும் நன்றி. எனக்கு அவரது படங்கள் மிகவும் பிடிக்கும். நான் உங்களது இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "அது நான் இல்லை".. 'மழை பிடிக்காத மனிதன்' சர்ச்சை குறித்து விஜய் ஆண்டனி கூறியது என்ன? - vijay antony