சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள அவரது 68வது திரைப்படம் 'கோட்' (Greatest of all time). யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள கோட் படத்தில் சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி கோட் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் மூன்று பாடல்கள் விசில் போடு, சின்ன சின்ன கண்கள், ஸ்பார்க் இதுவரை வெளியாகியுள்ளது.
#TheGreatestOfAllTime - Next up is the Trailer on Aug 3rd week..⭐ All eyes on #VenkatPrabhu now..🤝 Packed the film with many surprises & Three #ThalapathyVijay ..🤙
— Laxmi Kanth (@iammoviebuff007) August 4, 2024
Plot & Thalapathy roles are still kept under the wraps.. Expecting a Banger of a Trailer from Vp to pump up… pic.twitter.com/nLSRXiOUUr
மேலும் விஜய் பிறந்தநாளுக்கு ஷ்பெஷல் ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி கோட் படத்தின் 3வது சிங்கிள் ஸ்பார்க் பாடல் வெளியானது. இப்பாடல் ஒருபக்கம் வரவேற்பைப் பெற்று வந்தாலும் மறுபக்கம் நெட்டிசன்கள் பாடல் எதிர்பார்த்த அளவு இல்லை என எதிர்மறையான விமர்சனக்களை தெரிவித்து வருகின்றனர். கோட் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், அதில் ஒரு கதாபாத்திரம் De - ageing தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதுக்கு ஏன் அமெரிக்கா போனாங்க? நாக்பூர்லயே கிடைச்சிருக்குமே... pic.twitter.com/H8dl0gj8kK
— குருவியார் (@Kuruviyaaroffl) August 3, 2024
இந்நிலையில் ஸ்பார்க் பாடல் லிரிக்கல் வீடியோவில் இளம் வயது விஜய் தோன்றுகிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், படக்குழுவை வறுத்தெடுத்து வருகின்றனர். விஜய் ஏற்கனவே இளமையாக இருக்கிறார், அவரை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி மாற்றியிருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என கூறி வருகின்றனர். மேலும் படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், அதற்குள் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளை சரி செய்ய வேண்டும் என இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
#SPARK Lyrical Video is the #1 Most Viewed Videos in the past 24 hours on YouTube ⚡️ #TheGreatestOfAllTime
— The GOAT Movie (@GoatMovie2024) August 5, 2024
Vocal by @thisisysr | @Singer_vrusha 🎤
Thalapathy @actorvijay Sir ♥️
A @thisisysr Magical 🎼
A @gangaiamaren Lyrical ✍🏼
A @vp_offl Hero 😎 #TheGreatestOfAllTime… pic.twitter.com/N2ig6o18DE
மறுபுறம் ஸ்பார்க் பாடல் லிரிக்கல் வீடியோ கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில் அதிக பார்வையாளர்கள் யூடியூப்பில் பார்த்துள்ளதாக கோட் திரைப்படக்குழு தெரிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து இதுவரை படக்குழு எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கோட் திரைப்படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் சர்ப்ரைஸ்ஸை உடைத்த சூரி! - soori reveal kottukkaali character