ETV Bharat / entertainment

சேது தாஸ் மாதிரி ஒரு நண்பன் வேணும்.. நண்பர்கள் தின சுவாரஸ்யங்களைப் பகிர்ந்த ஸ்ரீமன்! - Friendship day Special

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 4, 2024, 11:24 AM IST

Friendship day Special: நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, 90களில் அனைத்து ஹீரோக்களுக்கும் உயிர் நண்பனாக நடித்து கலக்கிய நடிகர் ஸ்ரீமன், தனது நண்பர்கள் குறித்து நம்மிடையே மனம் திறக்கிறார்.

Sriman
ஸ்ரீமன் (Credits - Sriman Instagram Page)

சென்னை: 1958ஆம் ஆண்டு பராகுவேயில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது சர்வதேச நண்பர்கள் தினம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து உறவுகளை விடவும் ஒருபடி மேலானது நட்பு. திருவள்ளுவர் கூட நட்பதிகாரம் என்று நட்புக்கென தனி அதிகாரமே எழுதியுள்ளார்.

எந்தவித ரத்த சம்பந்தமமுமின்றி நம் இறுதி நாட்கள் வரை உடன் பயணிக்கும் நண்பர்களை, நட்பை, கொண்டாட இப்படி ஒரு தினம் தேவைப்படத்தான் செய்கிறது. சமூக வலைத்தளங்களில் முஸ்தபா முஸ்தபா முதல் மீசைக்கார நண்பா என இணையவாசிகள் நண்பர்கள் தினத்தை சிறப்பிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த நண்பர்கள் தின நன்னாளில் தன்னுடைய நண்பர்கள் பற்றி நம்மிடம் பகிர்கிறார், 90களில் அனைத்து ஹீரோக்களுக்கும் உயிர் நண்பனாக நடித்து கலக்கிய நடிகர் ஸ்ரீமன்.

இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசிய ஸ்ரீமன், “நட்பில் இவர் சிறந்தவர், அவர் சிறந்தவர் என்று இல்லை. நட்பு என்றாலே சிறந்தது தான். உயிர் காப்பான் தோழன்‌ என்று ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சர்க்கில் உண்டாகும். சின்ன வயதில் இருந்து நம்ம கூடயே இருந்து நாம் என்ன செய்தாலும் சகித்துக்கொண்டு, நமது வளர்ச்சிக்கு உதவியாக ஒரு ஏணி மாதிரி இருப்பார்கள். நல்லதுலயும் எல்லா விஷயத்திலும் அவங்க தான் கூட இருப்பாங்க. குடும்பத்தை தாண்டி நல்ல நண்பர்கள் அமையும் போது தான் எல்லோரும் அடுத்த கட்டத்திற்கு போக வாய்ப்பாக அமையும்.

நல்ல நண்பர்கள் கீழே விழுந்தவர்களை மேலே தூக்கி நிறுத்துவார்கள். என் வாழ்க்கையில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். எனக்கு சரிவு வரும் போது நிறைய நண்பர்கள் கைகொடுத்து தூக்கி விட்டனர். நட்பு என்பது ஒரு அதிர்ஷ்டம். சேது ஸ்ரீமன் மாதிரி நண்பன் கிடைக்க வேண்டும் என்று நிறைய பேர் சொல்வார்கள். சினிமாவில் நண்பனாக நடிப்பது என்பது வேறு, நட்பு என்பது வேறு. நிறைய இடங்களில் பிரண்ட்ஷிப் இருக்கும்.

நிஜ வாழ்வில் நடந்த விஷயங்களை படத்தில் பண்ணும்போது யதார்த்தமாக இருக்கும். நான் யார் கூட எல்லாம் நடித்து இருக்கிறேனோ, 90களில் நடித்து வந்த நடிகர்களுடன் இன்னும் தொடர்பில் தான் இருக்கிறேன். அவர்களை அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகள் இல்லை என்றாலும், வாட்ஸ்ஆப்பில் பேசிக்கொள்வோம். வீட்டில் நடக்கும் நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வோம். சினிமாவுக்கு அப்பாற்பட்ட நண்பர்கள், இன்னும் பேசிட்டு தான் இருக்கிறோம்.

வாட்ஸ்ஆப் வந்ததற்கு பிறகு நேரில் சந்திப்பது குறைந்து விட்டது. வாட்ஸ்ஆப்பில் தான் அதிகம் பேசிக்கொள்வோம். நண்பர்களுக்குள்‌ எந்த விஷயங்களாக இருந்தாலும் அது பர்சனலாகத்தான் இருக்கும். எனக்கும், விஜய்க்கும் உள்ள நட்பு பற்றி நிறைய சொல்லிவிட்டேன். வரும் காலங்களில் இன்னும் சொல்கிறேன். திடீரென்று போன் செய்து பார்க்க வேண்டும் என்றால், போய் பார்த்து விடுவோம். 90’s நடிகர்கள் நாங்கள் எல்லாரும் ஒரு பெரிய கேங். இன்று வரை எல்லாரும் ஒன்றாகத் தான் இருக்கிறோம்.

25 பேருக்கு மேல் உள்ளோம். யாரும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுக்க மாட்டோம். நேரம் அமையும் போது சந்தித்துக் கொள்வோம். இந்த நட்புதான் எங்களை 30 ஆண்டுகளாக காப்பாற்றி வருகிறது. எனக்கு எல்லோரும் நண்பர்கள் தான். எதிரிகள் என்று யாரும் இல்லை. அதுதான் என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்” என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: நண்பர்கள் தினத்தில் மிகவும் ரசிக்கப்படும் தமிழ் திரைப்படங்கள்.. உங்கள் லிஸ்ட்டில் இதையும் சேர்த்துக்கோங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.